திமுகவிலிருந்து தூது வந்தது.. கூட்டணி பேச்சு நடந்தது.. தலைமையிடமிருந்து அழைப்பு வரவேண்டும்- கமல்
சென்னை: திமுகவிலிருந்து கூட்டணிக்காக தூது வந்தது. ஆனால் தலைமையிடம் இருந்து வரவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ஆவது ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் வைத்து இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நல்லது
இந்த விழாவில் கமல்ஹாசன் பேசுகையில் பிரதமரை சந்திக்க பல முறை நேரம் கேட்டும் கிடைக்கவில்லை. கட்சியில் சேர்ந்து காவி துண்டு போட்டுக் கொள்ள அல்ல. மய்யம் என்பது கொள்கைப்பற்று என கூறிக் கொண்டு மக்களுக்கு நடக்கவிருக்கும் நல்லதை தடுக்கக் கூடாது.

ஆரோக்கியம்
விட்டுக் கொடுத்தல் தானே அரசியல். நான் ஆரோக்கியமாக இருக்கும் போதே மக்கள் சேவையாற்ற வேண்டும். அதற்கு இன்னும் 5 ஆண்டுகள் உண்டு. இப்போது எனக்கு 60 வயதாகிறது. சக்கர நாற்காலியில் வந்து யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன். அரசியல் திட்டத்தின் ஒரு பகுதிதான் பிக்பாஸ். திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளிலும் நல்லவர்கள் உள்ளனர்.

மரியாதை
அவர்கள் நல்லப் பணி செய்துவிட்டு மரியாதை இல்லாமல் உள்ளனர். அவர்களை மக்கள் நீதி மய்யத்தில் சேர அறைகூவல் விடுக்கிறேன். திமுகவிலிருந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் தூது விடுவதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. தலைமையிடமிருந்து அழைப்பு வர வேண்டும்.

கருணாநிதி
நல்லவர்களுடன் சேருவதில் எந்த மாற்றமும் இல்லை. எம்.ஜி.ஆர்., கருணாநிதியிடம் இருந்து நல்லவைகளை எடுத்துக் கொள்வேன். கருணாநிதியிடம் எனக்கு நெருக்கம் கிடையாது. ஆனால் எம்.ஜி.ஆரிடம் இருந்தது. சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு குறித்து பேச விரும்பவில்லை. அது பெரிய செலவு. மக்கள் பணத்தில் செய்த செலவு என்றார் கமல்ஹாசன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications