"காந்தி பெயரை யாரும் காக்க தேவையில்லை.." ஒரு நொடி கேப் விட்டு கமல் அடுத்து சொன்ன பாயிண்டு! முக்கியம்
சென்னை: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக மத்திய அரசு விக்க்சித் பாரத்- ரோஸ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) அதாவது விபி-ஜி ராம் ஜி என்ற திட்டத்தைக் கொண்டு வருகிறது. இதற்குப் பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல் கூறியுள்ள கருத்துகள் கவனம் பெறுவதாக இருக்கிறது.
இந்தியாவில் கிராமப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்ய முந்தைய யுபிஏ அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை அமல்படுத்தியது. கடந்த 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்திற்கு மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்திருந்தது. இப்போது வரை மத்திய அரசின் முக்கிய திட்டமாகவே இது இருந்து வருகிறது.

மத்திய அரசு
இதற்கிடையே இந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக மத்திய அரசு விக்க்சித் பாரத்- ரோஸ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) அதாவது விபி-ஜி ராம் ஜி என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவை ஆளும் தரப்பு நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்திருந்தது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாடாளுமன்றத்திலேயே தங்கள் எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகிறார்கள்,
கமல்
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். காந்தி பெயரை யாரும் காக்கவும் மீட்கவும் வேண்டிய அவசியம் இல்லை என்ற அவர், மத்திய அரசின் புதிய திட்டத்தால் தமிழக அரசு மீதான சுமை கூடுகிறது என்றும் ஏழை மக்களுக்குக் கிடைக்கும் உதவியும், நலத்திடங்களும் குறைகிறது என்றும் தெரிவித்தார். பெயர் மாற்றத்தை விட நிதி குறைப்பால் தான் பாதிப்புகள் அதிகம் என்று குறிப்பிட்ட அவர், நீதி குறிப்பு தொடர்பாகவே இப்போது நாம் பேச வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிதி சுமையே முக்கியம்
சென்னை விமான நிலையத்தில் இது தொடர்பாகப் பேசிய கமல், "இந்த விவகாரத்தில் கருத்துதான் சொல்ல முடியும். காந்தியார் பெயரை யாரும் காக்கவோ மீட்கவோ வேண்டிய அவசியமில்லை. நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்.. மத்திய அரசின் இந்த திட்டத்தால் தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது. ஏழைகளுக்குச் சேர வேண்டிய பணம், நலத்திட்டங்கள் குறைகிறது. அதை மீட்கவும் காக்கவும் தான் நாம் முயற்சி செய்ய வேண்டும். அந்த பாயிண்ட்டை விட்டுவிட்டு வேறு விஷயம் குறித்துப் பேசக்கூடாது என்பதே எனது கருத்து" என்றார்.
2026 சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அப்போது திமுக கூட்டணிக்காகப் பிரச்சாரம் செய்வீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "கண்டிப்பாக உண்டு" என்று மட்டும் ஒரே வரியில் முடித்துக் கொண்டார்.
என்ன மாற்றம்
மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் முழுச் செலவையும் மத்திய அரசு ஏற்கும். அதேநேரம் அந்தப் பணிகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்டவற்றின் செலவுகளில் குறிப்பிட்ட விகிதத்தில் மாநில அரசு ஏற்கும். இருப்பினும், புதிய மசோதாவில், மொத்தச் செலவில் 60 சதவீதம் மத்திய அரசு ஏற்கும், மீதமுள்ள 40 சதவீதச் செலவை மாநில அரசு ஏற்கும். இது மாநில அரசுக்கு அதிக நிதியைச் சுமையை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் சாடுகிறார்கள். இதைக் குறிப்பிட்டே கமல் இந்தக் கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications