எனது குரலாக நீங்களும் உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளோம்.. தொரகா ரண்டி அன்னைய்யா.. கமல்
சென்னை: எனது குரலாக நீங்களும் உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளோம். நீங்கள் (எஸ்பி பாலசுப்பிரமணியம்) விரைவில் நலம் பெற வேண்டும் என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் லேசான கொரோனா பாதிப்பால் அண்மையில் சூளைமேட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அவரே வீடியோவாக பதிவிட்டு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மோசம் அடைந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என இளையராஜா, பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அது போல் அவரது உடல்நலம் குறித்து கேட்டறிய அமைச்சர் விஜயபாஸ்கரை மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பியிருந்தார். அது போல் அவரது சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் கூறுகையில் அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம்.
உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications