கமல்ஹாசன் அப்படி என்ன பேசினார்.. அகரம் விழாவில் நடந்தது என்ன.. பாஜக எதிர்ப்பது ஏன்?
சென்னை: நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் 20வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அந்த அமைப்பின் விழாவில் நடிகரும், மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். அகரம் விழாவில் கமல்ஹாசன் பேசும் போது, சர்வாதிகாரம், சனாதன சங்கிலிகளை உடைக்கும் ஒரே ஆயுதம் கல்வி தான். கல்வி தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள். அதில் வெல்ல முடியாது என்று கூறியிருந்தார். சனாதனம் குறித்து கமல்ஹாசனின் பேச்சு வடமாநிலங்களில் உள்ள சனாதன ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் 20வது ஆண்டிலும், அதன் விதைத் திட்டம் 15வது ஆண்டிலும் அடியெடுத்து வைத்துள்ளது.அகரம் பவுண்டேஷனால் பலன் பெற்ற பலர் சென்னையில் நேற்று நடந்த இந்த விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவினை நடிகர் சூர்யா, கார்த்தி, ஜோதிகா, சிவக்குமார் என அவர்களது குடும்பத்தினர் நடத்தினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் எம்பி, இயக்குனர் வெற்றிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டாக்டர்கள்
நடிகர் கமல்ஹாசன் விழாவில் பேசுகையில்," இந்த மேடையில் பார்த்த டாக்டரை அடுத்த வருடம் பார்க்க இயலாது. இப்போதைய டாக்டர்கள் மாதிரி அடுத்த ஆண்டு விழாவில் டாக்டர்களை காட்ட இயலுமா? என்பதில் சின்ன சந்தேகம் உள்ளது.ஏனென்றால் 2017 க்கு (நீட்தேர்வுக்கு பிறகு) பிறகு இவர்களால் இந்த முயற்சியை தொடங்க முடியவில்லை. ஏன் நீட் வேண்டாம் என்று சொன்னோம் என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.
சனாதன சங்கிலி
2017ம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை மருத்துவ கல்வி கிடைக்காமல் செய்துவிட்டது இந்த நீட் சட்டம். அகரம் நினைத்தால் ஒன்று செய்ய முடியாது. அந்த சட்டத்தை மாற்றி எழுதக்கூடிய பலத்தை தருவது கல்வி தான். அந்த கல்வி இந்த போரில் ஆயுதமின்றி நாட்டையே செதுக்க வல்லது. சர்வாதிகாரம், சனாதன சங்கிலிகளை எல்லாம் உடைக்கக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி தான்.
கல்வி ஆயுதம்
கல்வியை தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள். அதில் வெல்ல முடியாது. ஏனென்றால் பெரும்பான்மை உங்களை தோற்கடித்துவிடும். பெரும்பான்மை மூடர்கள் உங்களை தோற்கடித்து விடுவார்கள். அறிவு தோற்றுப்போய்விடும். இதை தாங்கி பிடிக்க வேண்டும். நின்று ஆண்டு கொண்டு இருப்பது தலைமை அல்ல. அதை புரிந்து கொள்ள எனக்கு 70 வயது ஆகிவிட்டது. இப்போது நான் சொல்கிறேன். நேற்று நான் முதலமைச்சருடன் பேசி கொண்டிருந்தேன். இந்த என்ஜிஓக்களை பெரிதாக ஆதரிக்க வேண்டும். அவர்கள் பண உதவி கேட்பது இல்லை. அனுமதி கேட்கிறார்கள். அதில் நமக்கு என்ன வலிக்க போகிறது என்று கூறினேன். கொடுத்துருங்க அய்யா என்றேன். அதற்கு அவர் செய்து கொண்டு இருக்கிறோம் என்றார். நாங்கள் செய்யத்தான் போகிறோம்.. செய்துக்கொண்டிருக்கிறோம் என்றார். அந்த பெருமையோடு தான் இங்கு வந்தேன் " என்று கூறினார்.
பாஜக எதிர்ப்பு
கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு வட மாநில பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல் வடமாநிலங்களில் உள்ள பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தியோரியா மக்களவைத் தொகுதி எம்பி சாசாங்க் மணி திரிபாதி எதிர்ப்பு தெரிவித்து கூறுகையில், "கமல்ஹாசனுக்கு நான் ஒரு விஷயத்தை நினைவூட்ட விரும்புகிறேன். 5,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹரப்பா, மொஹஞ்சதாரோ மற்றும் தோலாவிராவின் கலாச்சாரத்தில் இருந்து, புத்தர் மற்றும் ராமச்சந்திரர் சம்பந்தப்பட்ட பாரம்பரியம் அழியாமல் இருந்து வருகிறது. இந்த நாகரிகம் ஒருபோதும் அழிக்கப்படவில்லை. எகிப்து மற்றும் சிரியா அழிக்கப்பட்டன, ஆனால் இந்தியா அழியவில்லை. இதற்கு சனாதன தர்மமும் நமது மகான் சாதுக்களும் தான் காரணம். நமது கல்வி, நமது கலாச்சாரத்துடன் இணைந்து இருக்க வேண்டும்" என்றார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications