பலருக்கும் அவர் நம்மவர்... எனக்கு நல்லவர் - கமலுக்கு வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு கவிஞர் வைரமுத்து பிறந்நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை: பிறந்தநாள் என்பது சில மெழுகுவர்த்திகளை அணைப்பதல்ல சில தீபங்களை ஏற்றுவது, இருளைப் புறங்காண தீபங்கள் ஏற்றத் தெரிந்தவர் நண்பர் கமல்ஹாசன் என்று கவிஞர் வைரமுத்து தனது பிறந்த நாள் வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார். பலருக்கும் அவர் நம்மவர், எனக்கு நல்லவர். வாழ்க என்று பதிவிட்டுள்ளார் வைரமுத்து.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், தனது 66வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது ரசிகர்களும், கட்சித்தொண்டர்களும் மக்கள் நலத்திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்றைய தினம் கட்சி அலுவலகத்திற்கு வந்து தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்த கமல்ஹாசன், அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். கமல்ஹாசனுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமலுக்கு வாழ்த்தினை பதிவிட்டுள்ளார்.

பிறந்தநாள் என்பது சில மெழுகுவர்த்திகளை அணைப்பதல்ல; சில தீபங்களை ஏற்றுவது.இருளைப் புறங்காண தீபங்கள் ஏற்றத் தெரிந்தவர் நண்பர் கமல்ஹாசன்.தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். பலருக்கும் அவர் நம்மவர் எனக்கு நல்லவர். வாழ்க! என்று பதிவிட்டுள்ளார் வைரமுத்து.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications