சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டசபை தேர்தலில் மநீம, அமமுக தலா 3 இடங்களுடன் மொத்தம் 8% வாக்குகளை பெறும்: டைம்ஸ் நவ் சர்வே

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை தலா 3 இடங்களில் வெல்வதுடன் மொத்தம் 8% வாக்குகளைப் பெறும் என்கிறது டைம்ஸ்நவ்-சி வோட்டர் சர்வே.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான கருத்து கணிப்புகளை தொடர்ந்து டைம்ஸ்நவ் வெளியிட்டு வருகிறது. இதுவரை வெளியிட்ட கருத்து கணிப்புகளில் திமுகதான் ஆட்சியை கைப்பற்றும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kamals MNM, Dhinakarans AMMK may get each 3 seats: TImesNow Survey

இந்த முறை திமுக 177 இடங்களில் வென்று அபார வெற்றி பெறும் என்கிறது இந்த சர்வே. அதிமுக கூட்டணி 49 இடங்களில்தான் வெல்ல வாய்ப்புள்ளதாம். இதற்கு அப்பால் முதல் முறையாக சட்டசபை பொதுத்தேர்தலை எதிர்க்கொள்ளும் மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெறும் என்கிறது டைம்ஸ் நவ் சர்வே.

அதாவது தற்போதைய தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு 3 இடங்களும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு 3 இடங்களும் கிடைக்குமாம். இதில் மக்கள் நீதி மய்யத்துக்கு 4.4% வாக்குகளும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு 3.6% வாக்குகளும் கிடைக்குமாம்.

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 23 இடங்கள் பெற்று ஆட்சியைப் பிடிக்கும் - டைம்ஸ் நவ் சர்வேபுதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 23 இடங்கள் பெற்று ஆட்சியைப் பிடிக்கும் - டைம்ஸ் நவ் சர்வே

திமுக அணிக்கு 46%; அதிமுக அணிக்கு 34.6% வாக்குகள் கிடைக்கும் என்கிறது இந்த சர்வே. அதாவது அதிமுக கூட்டணியைவிட 12% கூடுதல் வாக்குகளை திமுக பெறும் என்கிறது இந்த கருத்து கணிப்பு. மநீம, அமமுக பெற்ற 8%வாக்குகள்; பாஜக எதிர்ப்பு அலையினால் சரிந்த வாக்குகள்தான் அதிமுகவின் தோல்விக்கும் திமுகவின் வெற்றிக்கும் காரணமாக இருக்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது இந்த சர்வே.

English summary
According to the TImesNow Survey, MNM and AMMK will get each 3 seats in the Tamilnadu Assembly Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X