சொந்த ஊரான ராமநாதபுரத்தில் கமல் போட்டி? மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் அழுத்தம்
Recommended Video

சென்னை:மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் சொந்த மாவட்டமான ராமநாதபுரம் தொகுதியில் நிற்க திட்டமிட்டிருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கமலஹாசன் தான் பிறந்த ராமநாதபுரம் மாவட்ட மண்ணில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து 21.02.2018ல் அரசியல் பயணத்தை தொடங்கினார். தற்போது கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் தீவிரமாக களம் இறங்கி தொண்டர்களை சந்தித்து வருகிறார். லோக்சபா தேர்தலை முன் வைத்து அவர் மேற்கொண்டு பிரச்சாரத்தை அதிமுக, திமுக உள்ளிட்ட மற்ற கட்சியினர் உற்று நோக்கி வருகின்றனர்.

தனித்து களம் காணும் கமல்
லோக்சபா தேர்தலில் எந்த கூட்டணியிலும் சேராமல், 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட கமல் முடிவு செய்துள்ளார் என்று அவரது கட்சி உறுப்பினர்கள் கூறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து விருப்ப மனு பெறும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கட்சியினர் மனு
அதில் ராமநாதபுரம் தொகுதியில் கமல் நிற்க வேண்டும் என்று கட்சி உறுப்பினர்கள் பலர் மனு அளித்து வருகின்றனர். இதுகுறித்து கட்சியினர் கூறி இருப்பதாவது:

அரசியல் விமர்சனம்
புதிய கட்சி, அரசியல் குழந்தை என்று கமலஹாசன் மீது பல்வேறு தருணங்களில் தொடர்ச்சியாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. கிராமசபை கூட்டங்களின்போது மக்கள் தரும் உற்சாகமே அவருக்கு தேர்தலில் தனித்து போட்டியிடும் துணிச்சலை தந்திருக்கிறது.

வலியுறுத்தி வருகிறோம்
அவரை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுமாறு வலியுறுத்தி வருகிறோம். சொந்த மாவட்டம்... அதோடு கமலின் தந்தை டி.சீனிவாசன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.

கட்சியினர் நம்பிக்கை
சிறந்த வழக்கறிஞர். மக்களிடையே நன்மதிப்பு பெற்றவர். எனவே, கமல் இத்தொகுதியில் வெற்றிபெற்றால் மக்களுக்கு பல பயனுள்ள திட்டங்களை கொண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, ராமநாதபுரம் தொகுதியில் கமல் போட்டியிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று அவர்கள் கூறினர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications