• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"அப்செட்".. ஜாதி ஓட்டுக்களால்.. வீழ்த்தப்பட்ட கமல்ஹாசன்.. ஏற்க முடியாத ஏமாற்றத்தில் மய்யம்!

|

சென்னை: கமல் தோற்று போனதை இன்னும் மய்ய உறுப்பினர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.. இதையடுத்து கோவையில் மறு வாக்குப்பதிவு நடத்தினால் நல்லா இருக்குமே என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

  Kamal கொடுத்த Tough! தோல்வியிலும் விஸ்வரூபம் | OneIndia Tamil

  கோவை தெற்கு தொகுதி ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பில் வாக்காளர்களை வைத்திருந்த தொகுதியாகும்.. நாளுக்கு நாள் இந்த தொகுதியின் பிரச்சாரங்கள் வைரலாகின..

  பதவியேற்கும் முன்பே அசத்தும் ஸ்டாலின்.. 1,212 ஒப்பந்த செவிலியர்களின் பணி நிரந்தரம்.. அரசு அறிவிப்புபதவியேற்கும் முன்பே அசத்தும் ஸ்டாலின்.. 1,212 ஒப்பந்த செவிலியர்களின் பணி நிரந்தரம்.. அரசு அறிவிப்பு

  இதுவரை எத்தனையோ கருத்து கணிப்புகள் வெளிவந்தாலும், இந்த தொகுதியின் வெற்றி குறித்து கடைசிவரை யாராலும் எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை.

   தபால் ஓட்டு

  தபால் ஓட்டு

  ரிசல்ட் தினத்தன்று, ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடத்துக்கு காலையில் கமல் வந்தார்.. ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது.. கொஞ்ச நேரம் அங்கேயே புன்னகையுடன் வலம் வந்துவிட்டு, கிளம்பிவிட்டார்.. பிறகு சாயங்காலம் வந்தார்.. ஒரு பேப்பர், பேனாவை எடுத்து கொண்டு, வானதிக்கு பக்கத்தில் உட்கார்ந்து, குறிப்புகள் எடுத்தார்.. தபால் ஓட்டு ரிசல்ட் வந்ததுமே அப்செட் ஆகி கிளம்பி சென்றுவிட்டார்.

  கமல்

  கமல்

  ஓட்டு எண்ணிக்கை முடிவில் கமலுக்கு சொற்ப ஓட்டுக்களில் தோல்வி ஏற்பட்டது.. இந்த முறை எப்படியாவது கமல் சட்டசபைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. அடுத்த முதல்வர் கமல்தான் என்று நம்பிக் கொண்டிருந்த மய்ய உறுப்பினர்கள் உடைந்து போனார்கள்..

   அதிமுக

  அதிமுக

  இதுகுறித்து அவர்கள் சொல்லும்போது, "திராவிட கட்சிகளை திருத்ததான் கமல் விரும்பினார்.. ஆனால், மக்களிடம் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டி உள்ளது.. ஜாதி ஓட்டுகள், அதிமுக பக்கம் போனது ஆச்சரியமாக இருக்கிறது.. எங்களால் இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை.. மீண்டும் மறுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.. நிச்சயம் கமல்தான் வெல்வார்.." என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

   எதிர்ப்பு

  எதிர்ப்பு

  அதேசமயம், திராவிட கட்சிகளை பகைத்து கொண்டார், பாஜக வேட்பாளரை துக்கடா என்று விமர்சித்ததை கோவை மக்கள் பலர் விரும்பவில்லை.. உபி முதல்வர் வந்தபோது, தேவையில்லாமல் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி ஆதாயம் தேட முயற்சித்தார், அதனால்தான் வெற்றி வாய்ப்பை இழந்தார் என்று ஒரு சாரார் புகாரை கொட்டுகின்றனர்.

  மனு

  மனு

  இதனிடையே, வானதிக்கு வெற்றி சான்றிதழும் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், இத்தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி, கோவை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது... ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி சார்பில் கோவை தெற்கில் போட்டியிட்ட ராகுல் காந்தி எனும் வேட்பாளர் இதுதொடர்பாக கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்...

   பாஜக

  பாஜக

  அதில், "வானதி சீனிவாசனின் வெற்றியில் சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்தை தீர்க்க வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாக்கப்பட வேண்டும். எனவே இங்கு மறு வாக்கு எண்ணிக்கையை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் கூறியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது, கமல், நேரில் தம்மை மரியாதை குறைவாக நடத்தினார் என்று சொல்லி, அவர் எழுதிய வாழ்த்து கடிதத்தை திருப்பி தந்தவர்தான் இந்த ராகுல் காந்தி.

  மறுவாக்கு எண்ணிக்கை

  மறுவாக்கு எண்ணிக்கை

  கமல் மீது சொல்லும் இந்த புகார்கள் எல்லாம் சரிதானா? மய்யத்தினரின் மறுவாக்கு எண்ணிக்கை என்ற இந்த கோரிக்கை நியாயம்தானா? என்பது குறித்து நாம் ஒருசிலரிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது "இப்போதுதானே கட்சிக்கு வந்தார்.. 3 வருடத்திலேயே எப்படி எல்லாம் சாத்தியமாகும்? சரியான கட்டமைப்பு இல்லாத காரணத்தினால்தான் ரஜினியே ஒதுங்கி கொண்டார்.. இதை கமலும் உணர்ந்து கொள்ள வேண்டும்..

  சாதி

  சாதி

  வெறும் புகழ் மட்டுமே வெற்றியை தேடி தராது.. மேல் மட்டத்திலேயே அரசியல் செய்வதும் எடுபடாது.. அதேசமயம், கமல் வாங்கிய வாக்கு சதவீதம் நல்ல முன்னேற்றமே.. இவரும் சீமானும் இணைந்திருந்தால், இவர்களின் கட்சி எம்எல்ஏக்கள் இந்நேரம் சட்டசபைக்கு சென்றிருப்பார்கள்.. இவர்கள் இருவருமே எதிர்பார்த்த மாற்றம் அப்போது வந்திருக்கும்.. நடுநிலை, இளைஞர்களின் வாக்குகளை கமல் சுண்டி இழுத்துள்ளதால், இனியும் மனம் தளராமல், கமல் இதே உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்" என்றனர்.

  English summary
  Kamalhansan Upset and will the re-count be held in Kovai South Constitution
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X