Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை வினோதினி பொளேர்.. இது வரலாறு காணாத மழை.. திரண்டு வந்த திமுக, மநீம.. கவனித்த பாஜக.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகையும், மக்கள் நீதி மய்யத்தின் கட்சியை சேர்ந்தவருமான வினோதினியின் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த ட்வீட்டினை மக்கள் நீதி மய்யத்தினர் உட்பட திமுகவினரும் சேர்ந்து ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.. இதற்கு என்ன காரணம்?
கடந்த 2011ம் ஆண்டு வெளியான "எங்கேயும் எப்போதும்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் வினோதினி வைத்தியநாதன்... இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருபவர்.. கடந்த வருடம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்..

actress vinodhini kamalhaasan

எந்நேரமும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருபவர் வினோதினி.. இவரது பெரும்பாலான பதிவுகளை மத்திய அரசை கடுமையாக விமர்சித்தே இருக்கும்.. இந்த பதிவுகள் வைரலாகி மக்களின் கவனத்தை பெற்றிருந்த நேரத்தில்தான், மநீமய்யத்தில் இணைந்தார். அன்று முதல் கமல் கட்சிக்கு பெரும் ஆதரவாகவும், பலமாகவும் இருந்து வருகிறார்..

தற்போது திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம்பெற்றுள்ளது.. எனவே, ஈரோடு இடைத்தேர்தல், எம்பி தேர்தல் போன்றவற்றில் கமல்ஹாசன் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார். அப்போதுமுதல், திமுகவை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தால், திமுக கூட்டணியில் உள்ளவர்கள் பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில், வினோதினியும் ஒரு பதிவு போட்டுள்ளார் . அதில் உள்ளதாவது:

"இது வரலாறு காணாத மழை.
மழை வடிய 8 மணி நேரம் ஆகும். நீங்க ஏன் 2 மணி நேரத்துல போட்டோ போடறீங்க?
எல்லா மழை நீர் வடிகால்கள் வேலையும் முழுசா முடிஞ்சிடுச்சு
மழைநீர் வடிகால் வேலை 92.6 சதவீதம் முடிஞ்சிருக்கு

ஒரு பத்து நாள் பாலில்லாம இருக்க முடியாதா
ப்ரெட்டுதான் வேணுமா
செம்பரம்பாக்கத்த பத்தி தெரியுமா

மழைநீர் வடிகால் வேலை 87.65 சதவீதம் முடிஞ்சிருக்கு
இத்தன மக்கள் ஏன் ரோட்டுல போறாங்க
வீட்டுலயே இருங்க
மஹாமஹம் தெரியுமா
பாப்ரி மஸ்ஜித் தெரியுமா
லண்டன்ல கூட மழை பேஞ்சா தண்ணி நிக்கும் தெரியுமா

ரெண்டு பேரு குடும்பத்துக்கும் தலா 1 லட்சம்
அஞ்சு பேரு குடும்பத்துக்கும் தலா 1 லட்சம்
மூணு பேரு குடும்பத்துக்கும் தலா 1 லட்சம்

மழைநீர் வடிகால் வேலை 91.35 சதவீதம் முடிஞ்சிருக்கு
ஸ்பெயின்ல கூட மழை பேஞ்சா தண்ணி நிக்கும் தெரியுமா
ஒரு பத்து நாள் சாப்பிடாம இருக்க முடியாதா
வயசானவங்க எதுக்கு அந்த இடத்துக்கு மழையில போனாங்க, மெட்ரோ வர்க்கு ஆறு வருஷமா நடக்குதுன்னு தெரியாதா
இது வரலாறு காணாத மழை

போட் கொஞ்சம் தாமதமாதான் வரும், பொறுங்க
உபில போயி பாருங்க, இதை விட கேவலமா இருக்கும் ரோடு
தூத்துக்குடி தெரியுமா அதுக்கு யாரு காரணம்
நீங்க இதெல்லாம் கேள்வி கேக்குறீங்க அப்போ நீங்க சங்கி

மாமா இந்த ஐடிய என்னன்னு பாத்து முடிச்சுவிடு
பொதுமக்கள் மேலையும் பொறுப்பு இருக்கு
பொதுமக்கள் தான் பொறுப்பு
பொதுமக்கள் ஏன் பொதுமக்களா இருக்காங்க - ஒரு ஆய்வு

மேயரை கேள்வி கேட்க திராணியிருக்கும் உனக்கு
இதே நிதி அமைச்சரைக் கேட்க திராணி இருக்கா?
நீ சங்கி
இந்தா மாட்டு சாணி, சாப்பிடு

மழைநீர் வடிகால் வேலைகள் 95.67 சதவீதம் முடிஞ்சிருக்கு
இவனுங்களே தாழ்வான பகுதிகள்ல வீடு கட்டுவானுங்களாம்,
இப்போ குத்துதே குடையுதேம்பானுங்களாம்

நீ மாமி நீ இதெல்லாம் கேக்காத
நீ டயர் நக்கி நீ இதெல்லாம் கேக்காத
நீ சோம்பி நீ இதெல்லாம் கேக்காத
நீ நாயுடு நீ இதெல்லாம் கேக்காத
நீ கவுண்டர் நீ இதெல்லாம் கேக்காத
நீ ரெண்டு கை உள்ளவன் நீ இதெல்லாம் கேக்காத

பெண் அதிகாரி மேல ஆசிட் ஊத்துன வரலாறு தெரியுமா
ஒரு பத்து நாள் கரண்ட் இல்லாம இருக்க முடியாதா
வேளா வேளைக்கும் உங்களுக்கெல்லாம் சாப்பிட்டுதான் ஆகணுமா
நீ அமெரிக்கால உக்காந்துட்டு இத பத்தி பேசாத
நீங்கல்லாம் இறங்கி வேலை செய்ய வேண்டியதுதானே,
வெறும் வரிகட்டிட்டு வீட்டுக்குள்ளேயே உக்காந்துப்பீங்களா

மாமா இந்த ஐடி என்னன்னு பாத்து முடிச்சுவிடு, ஓவரா பேசுது
நீ நாலு பேருகூட போனவதானே இரு உன் பழைய போட்டோலாம் போடுறோம்
இது வரலாறு காணாத மழை
சிட்னில கூட மழை பேஞ்சா தண்ணி நிக்கும்
ஆறு பேரு குடும்பத்துக்கும் தலா 1 லட்சம்" என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+