Kamarajar Birthday: கல்வி கண் திறந்த வள்ளல் காமராஜர் பிறந்தநாள் விழா.. முதல்வர் ஸ்டாலின் மரியாதை!
சென்னை: கர்மவீரர் காமராஜரின் 121 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை நங்கநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
காமராஜர் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இன்று காலை காமராஜர் இல்லத்தில் நோட்டு புத்தகங்களை காணிக்கையாக வைத்து அஞ்சலி செலுத்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மாநில அளவில் பேச்சுபோட்டியில் வென்ற மாணவர்களுக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பரிசுகளை வழங்குகிறார்கள். இன்றைய தினம் சென்னை நங்கநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தனக்கு பரிசாக கிடைத்த புத்தகங்களில் 7740 புத்தகங்களை இந்த பள்ளியின் நூலகத்திற்கு வழங்கினார்.
காமராஜர் குமாரசாமி- சிவகாமி அம்மாளுக்கு 15.07.1903 அன்று மகனாக பிறந்தார். அவர் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் அறிமுகத்தால் 1919ஆம் ஆண்டு முதல் சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டார்.
1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்திலும் பங்கேற்று சிறை சென்றார். இதையடுத்து அரசியலில் ஈடுபட்ட அவர் 1936 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும் 1937 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் விருதுநகர் எம்எல்ஏவாகவும் 1941 ஆம் ஆண்டு விருதுநகர் நகர்மன்ற தலைவராகவும் 1952 இல் விருதுநகர் எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
1954 ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் சட்டசபை உறுப்பினராக வென்ற காமராஜ் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். தனது 9ஆண்டுகால ஆட்சியில் கிராமங்கள்தோறும் தொடக்க பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வயில் மறுமலர்ச்சியை உருவாக்கினார்.
ஏழை குழந்தைகள் பசியாற்ற மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். தமிழகத்தில் பள்ளிகளே இல்லாத கிராமம்கூட இருக்கக் கூடாது என்ற இலக்கை வைத்து தமிழகத்தை வளர்ச்சிபாதைக்கு கொண்டு சென்றார். இவர் 1964 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவியேற்றார். நேரு மறைந்த பிறகு இந்தியாவின் பிரதமரை இரு முறை தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றினார்.
பிரதமர் பதவி இவரை தேடி வந்தும் கூட அதை இந்திரா காந்திக்கு கொடுக்குமாறு கூறியதாகவும் சொல்லப்படுகிறது. கல்வி கண் திறந்த காமராஜர் மறைவுக்கு பிறகு 1976 ஆம் ஆண்டு அவருக்கு பாரதரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சென்னை திநகரில் உள்ள அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக உள்ளது. தனது இறுதி மூச்சு வரை நேர்மை, நாணயம், தூய்மை, எளிமை உள்ளிட்ட நற்பண்புகளை கொண்டிருந்தார் காமராஜர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications