காமராசர் மறக்கப்பட்டால் மழையே தண்ணீரை மறந்துவிட்டது என்று பொருள் - கவிஞர் வைரமுத்து
சென்னை: கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 123 ஆவது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட உள்ளது. காமராஜரின் பிறந்தநாளையொட்டி, கவிஞர் வைரமுத்து தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் காமராஜரை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.
காமராஜரின் 123 ஆவது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள், கட்சியினர், காமராஜரின் புகழைப் போற்றி அவரது வாழ்நாள் சாதனைகளை நினைவுகூர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், காமராஜரின் பிறந்தநாளையொட்டி, கவிஞர் வைரமுத்து அவரை புகழை நினைவுகூர்ந்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''படிக்காத காமராசர், பள்ளிகள் செய்தார். வீடுகட்டாத காமராசர், அணை கட்டினார். புத்தகம் எழுதாத காமராசர், நூலகம் திறந்தார். கையில் காசுவைத்துக்கொள்ளாத காமராசர், ஏழைத் தமிழர்களை ஈட்டச் செய்தார். மற்றவருக்கு நாற்காலி தந்து தன் பதவி தான்துறந்தார். கருப்பு காந்தி என்று அழைக்கப்பட்டாலும் காந்தி காணாத துறவறம் பூண்டார்.
காமராசர் நினைக்கப்பட்டால் அறத்தின் சுவாசம் அறுந்துவிடவில்லை என்று பொருள். காமராசர் மறக்கப்பட்டால் மழையே தண்ணீரை மறந்துவிட்டது என்று பொருள் நான் உங்களை நினைக்கிறேன் ஐயா'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications