"எப்ப பார்த்தாலும் ஏன்..ப்பா".. கேள்வி கேட்ட பிஞ்சுகள்.. ஸ்வீட் மாஸ்டரின் கொடூரம்.. அலறிய காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே இரட்டை கொலையை செய்த தந்தை கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 மகள்களையும் மிக கொடூரமாக அடித்து கொன்ற பெற்ற தகப்பனை போலீசார் கைது செய்துள்ளனர்..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்துள்ளது குண்ணவாக்கம்.. இங்குள்ள சின்ன மதுரபாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.. 42 வயதாகிறது.. இவர் பேக்கரிகளில் ஸ்வீட் தயாரிக்கும் மாஸ்டர்.

மனைவி பெயர் கீதா..35 வயதாகிறது.. இவர்களுக்கு நந்தினி (16), நதியா (15), தீபா(8) என 3 மகள்களும், தீனா (10) என்ற மகனும் உள்ளனர்.

நதியா

நதியா

இவர்களில் நதியா, சில மாதங்களுக்கு முன்பு தீக்குளித்து இறந்துவிட்டதாக தெரிகிறது.. கோவிந்தராஜனின் மனைவி கீதா, வாலாஜாபாத் ஊத்துக்காடு பகுதியில் குடோனில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நந்தினி, வாலாஜாபாத்தில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்... தீனா, தாழம்பட்டு பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். தீபா, அதே பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.

 ஸ்வீட் மாஸ்டர்

ஸ்வீட் மாஸ்டர்

கோவிந்தராஜுக்கு குடிப்பழக்கம் உள்ளது.. எந்நேரமும் குடித்துவிட்டு, மனைவியிடம் தகராறு செய்வதுதான் இவருக்கு வேலை.. பேக்கரி வேலைக்கும் சரியாக போவது கிடையாதாம்.. சம்பவத்தன்று காலை வழக்கம்போல் மனைவி கீதா, வேலைக்கு சென்று விட்டார். வழக்கம்போல், கோவிந்தராஜ் குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்தார்... அப்போது மூத்த மகள் நந்தினியும், தீபாவும் இருந்தனர்..

 தள்ளாட்டம்

தள்ளாட்டம்

அப்பாவின் தள்ளாட்டத்தை பார்த்ததும், "ஏம்பா.. எப்ப பார்த்தாலும் குடிச்சிட்டு வந்து அம்மாவுடன் தகராறு செய்றீங்க? அம்மா வேலைக்கு போறாங்க.. நீங்க வேலைக்கு ஏன் போவதில்லை" என்று கேட்டுள்ளார்... இந்த கேள்வி கோவிந்தராஜனுனுக்கு ஆத்திரத்தை தந்துவிட்டது.. கீழே கிடந்த கட்டையை எடுத்து நந்தினியின் தலையில் ஓங்கி அடித்தார்.. பிறகு கழுத்தையும் இறுக்கினார்... இதில் வலி பொறுக்க முடியாமல் நந்தினி அலறவும், சத்தம் கேட்டு தீபா ஓடிவந்துள்ளார்.. தீபாவையும் அதே கட்டையால் தாக்கி கழுத்தை நெறித்தார் அப்பா.

நந்தினி

நந்தினி

நந்தினியும், தீபாவும் அலறி துடித்தபடியே கீழே சரிந்தனர்.. வெளியில் விளையாட சென்ற தீனா, வீட்டுக்கு வந்து பார்த்தபோது 2 பேரும் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை பார்த்து கதறினான்.. அப்போதுதான், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.. 2 பேரையும் மீட்டு ஒரகடம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்... ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.. இவ்வளவும் நடக்கும்போதே கோவிந்தராஜ் தப்பி ஓடிவிட்டார்..

கைது

கைது


பின்னர் அவராகவே ஒரகடம் போலீஸில் வந்து சரண் அடைந்தார். இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், கடந்த மாதம் கோவிந்தராஜ் இப்படித்தான் குடித்துவிட்டு மகள்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.. இதனால்தான் மனமுடைந்த, மூத்த மகள் நதியா தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாராம்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+