ஸ்பானிஷில் ‘கங்குவா’? ‘வாடிவாசல்’ 2 பாகமா?: தாணு தட்டிவிட்ட அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கங்குவா' படத்தின் தோல்வியால் சூர்யாவின் 'வாடிவாசலு'க்கு எந்தவிதமான பாதிப்புகளும் வராது என்று உறுதியாக நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் தாணு.

தமிழ் சினிமாவில் தன் படங்களுக்குப் பிரம்மாண்டமான விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் பெரிய பெயரை சம்பாதித்தவர் தயாரிப்பாளர் தாணு. அப்படித்தான் 'கபாலி' படத்திற்கு விமானத்தில் போய் ரஜினியின் படத்தை ஒட்டி விளம்பரப்படுத்தினார். 30 ஆண்டுகால சினிமா தொழிலில் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் கால் தடம் பதித்த இவர், முதன்முறையாகக் கன்னடத்தில் 'மேக்ஸ்' மூலம் அறிமுகமாகி இருக்கிறார்.

suriya vaadivaasal

கடந்த 2024இல் இவரது 'காக்க காக்க' படத்தினை கன்னடத்தில் எடுப்பதற்காக உரிமை கேட்டு கிச்சா சுதீப் வந்த போது அதைப் பணம் வாங்காமல் கொடுத்தவர் தாணு. அந்த உறவு இப்போது 'மேக்ஸ்' மூலம் மேலும் வலுப்பெற்று இருக்கிறது.

தாணுவின் தயாரிப்பில் வெளியாக உள்ள 'வாடிவாசல்' படத்தைப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். சூர்யாவின் திரை வாழ்வில் ஒரு முக்கிய படமாக இது அமையும் என்கிறார் தாணு. மூத்த எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலைத் தழுவித்தான் இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சினிமாவுக்கு வேண்டிய விசயங்களை வெற்றி தன் பாணியில் கலந்திருக்கிறார் என்கிறார்கள்.

தமிழர்களின் அடையாளமாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டுதான் கதையின் மைய களம். இதுவரை ஜல்லிக்கட்டுவை மட்டுமே பிரதானமாக வைத்து ஒரு படம் தமிழில் வெளியாகவில்லை. சில காட்சிகளாக எல்லிஸ் டங்கன் காலத்திலேயே இடம்பெற்றுள்ளது.

சூர்யாவின் 'கங்குவா' மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், வரப் போகும் 'வாடிவாசல்' படத்தை இது பதிக்குமா? என்ற கேள்விக்குத் தயாரிப்பாளர் தாணு பதிலளித்திருக்கிறார். "நிச்சயம் 'வாடிவாசல்' வேறு மாதிரியான வெற்றியை சூர்யாவுக்குக் கொடுக்கும். கதை அப்படி. ஹிந்தியில் வெற்றிக்கு அழைப்பு வந்தது. இரண்டு பெரிய கம்பெனி அவரை அழைத்தார்கள். 'வாடிவாசல்' முடிந்ததும் செய்யலாம் என சொல்லிவிட்டார்.

படம் ஒரே பாகமாக வருமா? அல்லது இரண்டு பாகமா என்பதை இப்போது சொல்ல முடியாது. சூர்யா, வெற்றிமாறன் சந்திப்பு நடக்க உள்ளது. அதன் பின் கால்ஷீட் கொடுத்த பின் படப்பிடிப்பு தொடங்கும். என்னைப் பொறுத்தவரை 'கங்குவா’ நல்ல படம்தான். ஏதோ சூழ்நிலை அதை முடக்கிவிட்டது. சிவாஜியை வைத்து 'கர்ணன்’ 50 லட்சத்தில் எடுத்த படம். ஆனால், எம்.ஜி.ஆரின் 'வேட்டைக்காரன்’ 6 லட்சத்தில்தான் எடுக்கப்பட்டது. வெற்றி என்னவோ எம்.ஜி.ஆர்தான் கிடைத்தது. நான் கூட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் ஸ்பானிஷில் 'கங்குவா’வை ஒன்றரை மணிநேரமாகச் சுருக்கி எடுக்கச் சொன்னேன். அங்கே நிச்சயம் வெற்றிபெறும்” என்று சொல்லி இருக்கிறார்” என்கிறார்.

இளையராஜா பாடல்களின் உரிமை பற்றி வழக்குகள் தொடர்ந்துள்ளது பற்றியும் யாருக்கு இசை உரிமை என்பது பற்றியும் ஒரு கேள்விக்குப் பதிலளித்துள்ள தாணு, "படத்தின் இசை உரிமையை இளையராஜாவுக்கு ஒரு தயாரிப்பாளர் எழுதிக் கொடுத்திருந்தால், அதன் உரிமை அவருக்குத்தான் சொந்தம். நான் அவருடன் செய்த படத்தின் இசை உரிமையை எழுதிக் கொடுக்கவில்லை. எனவே அது எனக்குத்தான் உரிமை. எழுதி கொடுத்த பிறகு அதில் உரிமை கொண்டாட தயாரிப்பாளருக்கு அதிகாரம் கிடையாது. நான் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த போது ஒரு இசைத் தட்டு வெளியீட்டு நிறுவனத்துடன் ராஜா போராடி 150 தயாரிப்பாளர்களுக்குப் பணம் வாங்கிக் கொடுத்தார். அதில் கிடைத்த பணத்தை வைத்துத்தான் சங்கத்தில் அன்னதான திட்டமே தொடங்கினோம். இந்த விசயத்தில் இளையராஜாவைக் குறை சொல்லவே கூடாது" என்று பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+