கோவிலுக்கு பட்டுடுத்தும் பெண்கள்.. ஜிலு ஜிலுன்னு மின்னும் போலி பட்டு.. அமைச்சர் காந்தி எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டு சேலைகள் ஜிலு ஜிலு என்று பளபளப்பாக இருப்பதை பார்த்து மக்கள் ஏமாந்து விடுகிறார்கள் என்று அமைச்சர் காந்தி கூறியுள்ளார். கூட்டுறவு விற்பனையை 1000 கோடியாக கூட நாங்கள் அதிகரிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.

பட்டு ஆடைகள் உடலின் காந்த சக்தி அதிகம் வெளியேறாமல் காக்கும் தன்மை கொண்டது. இல்லற வாழ்வில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பட்டு ஆடைகளை அதிகம் உடுத்துகின்றனர். கோவிலுக்கும் திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்கு செல்லும் போதும் பட்டாடைகளை அணிந்து சென்றால் உடலில் நேர்மறை ஆற்றலும் காந்த சக்தியும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாகும். பட்டுப்புடவைகளின் விலை பல ஆயிரம் என்றாலும் அதனை வாங்கி உடுத்த பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

Kanicipuram silk saree: TN Minister Gandhi warns Beware your silk saree may be fake

பட்டுப்புடவையின் மகிமை அறிந்துதான் அம்மனுக்கு பட்டுப்புடவைகளை சாத்துகின்றனர். அம்மனுக்கு சாற்றிய பட்டுப்புடவையில் நேர்மறை சக்திகள் படிந்திருக்கும் என்ற நம்பிக்கை அதிகம் உள்ளது. எனவேதான் அம்மனுக்கு உடுத்திய புடவைகளை ஏலம் எடுப்பதற்கு அதிகம் பேர் ஆர்வம் காட்டுகின்றனர். கலாச்சாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும் பெயர் பெற்ற இந்தியாவில் பட்டுப்புடவைகளுக்கு என்று தனி மவுசு உண்டு. உலகளவில் பட்டுப்புடவைகள் தயாரிப்பில் 2 வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் பல்வேறு ரக பட்டுப்புடவைகள் உள்ளன. உடைகளில் நவீன வளர்ச்சியை எட்டியிருக்கும் இப்போது கூட பெண்களுக்கு பட்டு புடவைகள் மீது அலாதி பிரியம் உண்டு. அதே நேரத்தில் தாங்கள் வாங்கும் பட்டுப்புடவைகள் தரமானவைதானா என்பது பலருக்கும் தெரிவதில்லை.

இதனிடையே ஜிலு ஜிலு என்று பளபளப்பாக இருக்கும் பட்டுப்புடவைகள் எல்லாம் ஒரிஜினல் பட்டுப்புடவைகள் அல்ல என்று கூறியுள்ளார் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி. தமிழ்நாடு அரசின் கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீடில் பட்டு நகரமான காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் தெருவில், புதிதாக கட்டப்பட்டுள்ள காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின், புதிய விற்பனை நிலையத்தினை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று திறந்து வைத்தார்.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர். காந்தி, "கூட்டுறவு சங்கங்கள் மூலம் உருவாக்கப்படும் பட்டுகள் தான் உண்மையான கைத்தறி பட்டுகள், இந்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் உருவாக்கப்படும் பட்டுக்களில் தான் தங்கத்தின் அளவு, வெள்ளி அளவு ஆகியவற்றுக்கு சான்றிதழ் வழங்கப்படும். கூட்டுறவு துறைகளில் வழங்கப்படும் பட்டுப் புடவைகளை 6 மாதம் கழித்து கொண்டு வந்தால், சந்தையைப் பொறுத்து விலை அதிகரிக்கும் என்று கூறினார்.

திமுக அரசு அமைந்த பிறகு தான், நவீன முறையை கொண்டு வந்துள்ளோம். 7 கோடி நஷ்டத்தில் இருந்த கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் திமுக அரசு வந்த பிறகு தான் அதனை 9 கோடி ரூபாய் லாபத்திற்கு கொண்டு வந்துள்ளோம் என கூறினார். மேலும் தொடர்ந்து கூட்டுறவு பட்டு சங்கங்கள் மூலம் வருவாய்களை அதிகரிக்க இந்த அரசு முயற்சி எடுத்து வருகிறது. 150 கோடியாக இருந்த விற்பனையை 200 கோடியாக உயர்த்தினோம். இந்த ஆண்டு 400 கோடி இலக்கு வைத்துள்ளோம். இதை நாங்கள் 1000 கோடியாக கூட அதிகரிப்போம். எடுத்துக்காட்டாக இந்த காமாட்சி அம்மன் பட்டு கூட்டுறவு விற்பனையை, 10 கோடியில் இருந்து 13 கோடியாக அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டினார். நலிவடைந்த சங்கங்களுக்கு முதலீடுகள் கொடுத்து தொடர்ந்து நலிவடைந்த சங்கங்களை மீட்டெடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம். கைத்தறி ரகங்களை விசைத்தறையில், உற்பத்தி செய்து வருவதை தடுக்க ஏழு தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் போலி பட்டுச்சேலை விற்பனை அதிகரித்துள்ளது. அதனை தடுக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஆர்.காந்தி பதிலளிக்கையில், தனியாரில் விற்கப்படும் போலி பட்டுச்சேலைகள் ஜிலு ஜிலு என இருக்கிறது. அதை பார்த்தவுடன் மக்களுக்கு வாங்க வேண்டும் என தோன்றுகிறது. மக்களுக்கு உண்மை எது பொய் எது என தெரியவில்லை. இதனை தடுக்கும் பொருட்டு காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் போலி பட்டுச்சேலை குறித்து விளம்பர பதாகைகள் வைத்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். அதே போன்று அனைத்து கூட்டுறவு கடைகளிலும், இதுகுறித்து தகவல்கள் இடம்பெறும் எனவும் அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+