உதயநிதிக்கு மட்டும்தான் செக்.. சபரீசனுக்கு அல்ல.. திமுக உடைய போகுது! திருச்சி சூர்யா இப்படி சொல்றாரே
சென்னை: கனிமொழிதான் பாஜகவில் கீ. 2 ஜி வழக்கு உள்ளது. அதை வைத்து கனிமொழியை டெல்லி மிரட்டலாம். நான் சொல்கிறேன் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகள் போல.. அதிமுக சில்லு சில்லாக உடைந்தது போல திமுகவில் நடக்கலாம். திமுக கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தால் கண்டிப்பாக கட்சி சில்லு சில்லாக உடையும், என்று திருச்சி சூர்யா ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை ரெய்டுகள் தொடர்பாக தொடர்பாக திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டுமே டார்கெட். வேறு யாருக்கும் இல்லை. உதயநிதி ஸ்டாலினை மட்டுமே தூக்க போகிறார்கள். சபரீசனை கைவைக்க மாட்டார்கள். கனிமொழியை சீண்ட மாட்டார்கள். டார்கெட் உதயநிதி மட்டுமே. பாஜக சபரீசன், கனிமொழிக்கு சப்போர்ட் தருகிறார்கள். சபரீசன் கனிமொழி இடையே சண்டை உள்ளது. நான்தான் திமுக ஆட்சி மீண்டும் வர காரணம், ஐபேக் நிறுவனத்தை கொண்டு வந்தது நான் என்றெல்லாம் சபரீசன் கூறி உள்ளார்.
என்னால் கெட்டபெயர் வருகிறது. துபாய் போ என்று என்னை அனுப்பிவிட்டீர்கள். இப்போது அனுபவியுங்கள் என்று சபரீசன் நினைக்கிறார். இன்னொரு பக்கம் உதயநிதி சரிவை கனிமொழி எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார். இதுதான் பாஜகவிற்கு சாதகமாக மாறிவிட்டது. இதைத்தான் பாஜக பயன்படுத்திக்கொண்டு விட்டது. சூழ்நிலை இப்படியே போனால் திமுக உடையும். திமுகவில் கலகம் ஏற்படும். அதிமுகவில் ஏற்பட்டது போல திமுகவில் நடக்கும்.

கனிமொழிதான் பாஜகவில் கீ. 2 ஜி வழக்கு உள்ளது. அதை வைத்து கனிமொழியை டெல்லி மிரட்டலாம். நான் சொல்கிறேன் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகள் போல.. அதிமுக சில்லு சில்லாக உடைந்தது போல திமுகவில் நடக்கலாம். திமுக கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தால் கண்டிப்பாக கட்சி சில்லு சில்லாக உடையும்.
5 அமைச்சர்கள் கைதாக போகிறார்கள். அது நடக்கும் போது.. திமுகவில் நான்தான் பெரிய ஆள் என்று பலரும் தடி எடுப்பார்கள். அது பெரிய பிரச்சனை ஆகி.. கட்சியில் கனிமொழி கூட பிரச்சனை செய்யும் நிலை வரும். தெலுங்கானாவில் சந்திசேகர ராவ் குடும்பத்தை காய் வைத்தனர். அதே பார்முலாவை இங்கே கொண்டு வருகின்றனர். டாஸ்மாக்தான் வருமானம் தரக்கூடிய துறை. இங்கே மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான். டாஸ்மாக் ஊழலை பொறுத்தவரை ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்கிறார்கள்.
ஆனால் அவர்கள் கண்டுபிடித்து இருப்பது 50 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல். அதனால் இதை பெரிதாக்க பார்க்கிறார்கள். ஸ்டாலின் குடும்பத்தை நேரடியாக குறி வைக்கிறார்கள். அதுதான் அவர்களின் பிளான். உதயநிதியின் நட்பு வட்டம் கடும் சிக்கலில் உள்ளது. ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ், விக்ரம் ஜூஜூ ஆகியோர் எல்லாம் உதயநிதி ஸ்டாலினின் கருப்பு பண முதலைகள். அவர்கள் சிக்கலில் உள்ளனர், என்று திருச்சி சூர்யா ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் வழக்கு
டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக டாஸ்மாக்கிற்கு எதிரான விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை 22-ந்தேதி (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான முதல் அமர்வு, தனி நபர் செய்த தவறுகளுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் கண்டனம் தெரிவித்தது. இறுதியில், டாஸ்மாக்கிற்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.












Click it and Unblock the Notifications