கனிமொழியின் கணவர் அரவிந்தன் உடல்நிலையில் முன்னேற்றம்! மருத்துவமனையிலிருந்து விரைவில் டிஸ்சார்ஜ்!
கனிமொழி கணவர் அரவிந்தன் உடல்நிலையில் முன்னேற்றம்.
சென்னை: கனிமொழி எம்.பி.யின் கணவர் அரவிந்தன் நுரையீரல் தொற்று காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் விரைவில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனிமொழியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசும் முதல்வர் ஸ்டாலின் சிகிச்சை முறைகள் பற்றி அவ்வப்போது கேட்டறிந்து வருகிறார்.

கனிமொழி கணவர்
திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அளிக்கப்பட்டு வரும் தீவிர தொடர் சிகிச்சையின் காரணமாக உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே சிங்கப்பூரில் தங்கி தனது கணவர் அரவிந்தன் உடல்நிலையை கவனித்து கொள்கிறார் கனிமொழி எம்.பி.

சென்னை திரும்புதல்
நுரையீரல் தொற்றுக்கான காரணம் குறித்து எந்த விவரமும் வெளியாகவில்லை. அரவிந்தன் பூரண நலம் பெற்ற பின்னர் அவரை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டு கனிமொழி சென்னை திரும்புவார் எனக் கூறப்படுகிறது. இதனிடையே தற்போது சிங்கப்பூரில் இருந்தபடியே தனது தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அப்டேட்ஸ் கேட்டு வருகிறார்.

கனிமொழி கவலை
கணவர் அரவிந்தனுக்கு உடல் நலக் குறைவு என்ற தகவலறிந்து கனிமொழி சற்று கலங்கி போய்விட்டதாக தெரிவிக்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர். கனிமொழியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் அரவிந்தனின் உடல்நலம் பற்றி பற்றி கேட்டறிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நலம் விசாரிப்பு
கனிமொழியின் உதவியாளர்களை தொடர்பு கொள்ளும் கட்சியினரும், முக்கிய நிர்வாகிகளும், ஆதரவாளர்களும், அரவிந்தனுக்கு என்னாச்சு, என்ன டிரீட்மெண்ட் போகுது என்பதை ஆர்வமுடன் விசாரித்து வருகிறார்கள்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications