திமுக மகளிரணியில் புதிய உறுப்பினர் சேர்க்கை! தனி இணையதளம்! மும்முரம் காட்டும் கனிமொழி எம்.பி.!
சென்னை: திமுக மகளிரணியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் கனிமொழி எம்.பி. தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.
அதன் முன்னோட்டமாக திமுக மகளிரணிக்கு என தனி இணையதளம் ஒன்றையும் உருவாக்கி அதனை ஸ்டாலினை அழைத்து தொடங்கி வைக்கவிருக்கிறார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் இதுவரை கவனம் செலுத்தி வந்த கனிமொழி எம்.பி., இப்போது திமுக மகளிர் அணியை வலிமையாக கட்டமைக்க களமிறங்கியிருக்கிறார்.

திமுக மகளிரணி
திமுகவில் உள்ள சார்பு அணிகளில் இளைஞரணியும், மகளிரணியும் மட்டுமே பிரதான இடத்தில் இருந்து வருகின்றன. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நேற்று தொடங்கியதல்ல, ஆரம்பகாலம் தொட்டே திமுகவில் இவ்விரு அணிகளுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது. இந்தச் சூழலில் இளம்பெண்களை புதிய உறுப்பினர்களாக இணைக்கும் வகையில் திமுக மகளிரணிக்கு புதிதாக தனி இணையதளம் ஒன்றை வடிவமைத்திருக்கிறார் கனிமொழி எம்.பி.

தனி இணையதளம்
இந்த இணையதளம் மூலம் திமுக மகளிரணியில் இளம்பெண்கள் ஆன்லைன் மூலம் உறுப்பினராக சேரமுடியும். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் எல்லோரும் நம்முடன் என்ற முழக்கத்துடன் திமுகவில் உருவாக்கப்பட்ட ஆன்லைன் உறுப்பினர் சேர்ப்பை போல் இப்போது கனிமொழி இளம்பெண்களை கட்சியில் இணைக்க புதிய வழிமுறையை கையிலெடுத்துள்ளார். உலக மகளிர் தினமான இன்று முதல்வர் ஸ்டாலினை அழைத்து விழா நடத்தி இந்த இணையதளத்தை கனிமொழி தொடங்கி வைக்கிறார்.

கனிமொழி பயணம்
இதனிடையே இநி வரும் நாட்களில் தமிழகம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம் செய்து திமுக மகளிரணியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை துரிதப்படுத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலினின் முழு அனுமதியோடு தான் இந்த நடவடிக்கைகளில் கனிமொழி தீவிரம் காட்டத் தொடங்கியிருப்பதாகவும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மகளிரணியை வலிமை வாய்ந்த கட்டமைப்பாக உருவாக்கிவிடுவார் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

திமுக இளைஞரணி
திமுக இளைஞரணியில் இளம்பெண்களை புதிதாக உறுப்பினர்களாக சேர்க்கும் நிகழ்வு அண்மையில் கோவையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அப்போதே மகளிரணியில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த தொடங்கிய கனிமொழி, இடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிஸியாக இருந்தார். இப்போது முழுக்க முழுக்க மகளிரணி சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.
-
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications