சீரியஸாக பேசிய எடப்பாடி பழனிசாமி.. பொசுக்னு ஒரே நொடியில் கனிமொழி பேசியதை பாருங்க
சென்னை: கனிமொழி எடப்பாடி பழனிசாமியை திருச்செந்தூர் பிரச்சாரத்தில் செய்திருந்த விமர்சனம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. திருச்செந்தூர் தேர்தல் களம், கனிமொழி எம்பி பேச்சு, மற்றும் அதிமுக திமுக அரசியல் மோதல் ஆகிய முக்கிய அம்சங்களை மையப்படுத்தி, எடப்பாடி பழனிசாமியின் உருக்கமான கருத்துக்கு கனிமொழி அளித்த அதிரடி பதிலடியை இங்கே சுருக்கமாக பார்க்கலாம். என்ன நடந்தது திருச்செந்தூர் பிரச்சாரத்தில்?
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் தலைவர்களுக்கு இடையேயான வார்த்தைப் போர் அனல் பறக்கிறது.. அதுவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருக்கமான பேச்சை, திமுக எம்பி கனிமொழி தனது பாணியில் கடுமையாகக் கேலி செய்து பேசியிருப்பது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி உருக்கம்
நேற்று எடப்பாடி தொகுதியில் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு வாக்காளர்களிடம் பேசினார்.
"நான் இன்று இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்கு இந்தத் தொகுதி மக்களாகிய நீங்கள் தான் காரணம். நீங்கள் கொடுத்த அங்கீகாரம் தான் இந்த பதவி. நான் எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளையாகவே இருக்கிறேன். ஒருவேளை எனக்கு மறுபிறவி என்று ஒன்று இருந்தால், மீண்டும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என உருக்கமுடன் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த நெகிழ்ச்சியான பேச்சு அவரது தொண்டர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது.
கனிமொழி எம்பி பதிலடி
ஆனால், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து வாக்கு சேகரித்த கனிமொழி, எடப்பாடியின் இந்த பேச்சை ஒரே நொடியில் நகைச்சுவையாக்கி விட்டார்.
கூட்டத்தில் கனிமொழி பேசியபோது, தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசு பறிக்க முயன்றதையும், அதை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்தியதையும் சுட்டிக்காட்டினார். பிரதமர் மோடியே இது தொடர்பாகப் புலம்பிக் கொண்டிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பேச்சு வியப்பளிப்பதாக கனிமொழி கூறினார்.
சீரியஸாக பேசிய எடப்பாடி
"எடப்பாடி பழனிசாமிக்கு என்னவாயிற்று? அவர் ஏற்கனவே தமிழ்நாட்டில் தான் பிறந்துள்ளார். தானொரு தமிழன் என்று தான் இத்தனை காலம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்ட போது ஒன்றிய அரசுக்கு ஆதரவாகப் பேசிவிட்டு, இப்போது தேர்தல் நெருங்கியதும் வாக்கு வங்கி அரசியலுக்காக அடுத்த பிறவியில் தமிழகக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று நாடகமாடுகிறார்" என கனிமொழி சாடினார்.
தொடர்ந்து பேசிய கனிமொழி "எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை கிடையாது. ஒருவேளை அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், எடப்பாடி பழனிசாமி தனக்குப் பிடித்த இடமான குஜராத்திலேயே பிறந்து கொள்ளட்டும். தயவு செய்து தமிழ்நாட்டில் மட்டும் பிறக்க வேண்டாம். குஜராத்தில் பிறந்தவர்களுக்காகத் தான் இப்போது அவர் கைகட்டி சேவகம் செய்து கொண்டிருக்கிறார். எனவே அடுத்த முறை பிறக்கும்போது கொஞ்சம் முதுகெலும்புடன் அங்கேயே பிறக்கட்டும்.. தமிழ்நாட்டில் அவர் பிறக்கத் தேவையில்லை" என்று சிரித்துக் கொண்டே அதேசமயம் மிகவும் காட்டமாக விமர்சித்தார்.
ஒரு நொடி சிரிப்பு
கனிமொழியின் இந்த பேச்சை கேட்ட அங்கிருந்த தொண்டர்களும் பொதுமக்களும் பலத்த சிரிப்பொலியை எழுப்பினார்கள்.. எடப்பாடி பழனிசாமி மிகவும் சீரியஸாக முன்வைத்த உருக்கமான கோரிக்கையை, கனிமொழி தனது கேஷூவலான விமர்சனத்தின் மூலம் முற்றிலுமாக சிதைத்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தேர்தல் களம் முடிவுக்கு வரும் வேளையில், இந்த "மறுபிறவி" குறித்த விவாதம் திருச்செந்தூர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது...!!
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications