பிரிட்ஜை விடுங்க! ரூ 8000 கூப்பனில் பெரிய கிரைண்டரை வாங்குங்க! சுய தொழில் செய்ங்க! கனிமொழி ஐடியா
சென்னை: ரூ 8000 கூப்பனை வைத்து ஒரு பெரிய கிரைண்டர் வாங்கி, அதில் மாவு அரைத்து சுயத தொழில் தொடங்கலாம். எனவே திமுக கொடுக்கும் கூப்பன் எப்போதும் முதலீடு என கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி பேசுகையில், முதலமைச்சர் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையாக வழங்குவோம் என்று சொன்னபோது, அதை வழங்க முடியாது, யாராலும் வழங்க முடியாது என்று கூறினார்கள். ஆனால் இன்று, முதலமைச்சர் இரண்டாயிரம் ரூபாய் வழங்குவோம் என்று கூறியவுடன், "நானும் இரண்டாயிரம் ரூபாய் வழங்குவேன்" என்று கூறுகின்றனர்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அதே விவசாயிகளுக்காக, இன்று எந்தவித மின்மீட்டரும் பொருத்தப்படாத புதிய பம்பு செட்டுகளை, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவோம் என்று நம்முடைய முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது தான் திராவிட மாடல் ஆட்சி.
"Choice is yours" என்று கூறி, நம்முடைய முதலமைச்சர் எட்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள கூப்பனை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார். அந்த கூப்பனை பயன்படுத்தி, நீங்கள் விரும்பிய எந்தப் பொருளையும் வாங்கிக் கொள்ளலாம். வீட்டில் டிவி இருக்கிறதா? அதை மாற்றி இன்னும் பெரிய டிவி வாங்க வேண்டுமா? பழைய டிவியை கொடுத்து, இந்த 8000 ரூபாய் கூப்பனை பயன்படுத்தி புதிய டிவி வாங்கிக் கொள்ளலாம். அதனால், 8,0000 ரூபாய் கூப்பனை பயன்படுத்தி, உங்களுக்கு தேவையானதை நீங்கள் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
மகளிருக்கு ஃபிரிட்ஜ் வழங்குவதாக அதிமுக கூறியுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையை யாரும் பெரிதாக கவனிக்க மாட்டார்கள். நமது தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு 8000 ரூபாய் கூப்பன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி அவர்கள் வீட்டு உபயோகத்திற்குத் தேவையான எந்தப் பொருளையும் வாங்கிக் கொள்ளலாம். சுய தொழில் தொடங்குவதற்காக கிரைண்டரும் வாங்கிக் கொள்ளலாம்.
தலைவர் கலைஞர் அவர்கள் எப்படி "தொலைக்காட்சி பெட்டி வழங்குவேன்" என்று கூறி அதை நிறைவேற்றினாரோ, அதுபோல அவர் வழங்கிய வண்ணத் தொலைக்காட்சிகள் இன்று வரை பயன்பாட்டில் உள்ளன.

நாம் வாங்கும் டிவிகள் இரண்டு ஆண்டுகளிலேயே செயலிழந்து விடுகின்றன; ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கிய தொலைக்காட்சி இன்றும் இயங்கி கொண்டிருக்கிறது.
கலைஞரின் வாரிசாக, கலைஞரைப் போல சொன்னதைச் செய்து காட்டும் முதலமைச்சர். நமது திராவிட மாடல் 2.0 ஆட்சியில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அப்துல் சமத் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.












Click it and Unblock the Notifications