"நீங்க தலையிடாதீங்க.. அண்ணன் பார்த்து கொள்வார் என்று விட்டுடாதீங்க".. கனிமொழி தந்த முக்கிய அட்வைஸ்
பெண் கவுன்சிலர்களுக்கு திமுக எம்பி கனிமொழி அட்வைஸ் தந்துள்ளார்
சென்னை: அண்ணன் பார்த்துக்கொள்வார்.. அப்பா பார்த்து கொள்வார் என்று விட்டு விடாதீர், குடும்ப உறுப்பினர்கள் தங்களது பணியில் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பெண் கவுன்சிலர்கள், மேயர்களுக்கு திமுக எம்பியும் அக்கட்சியின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. குறிப்பாக, 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.
அதன்படி, சென்னை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த 28 வயதான பிரியா பொறுப்பேற்றார்... 3வது முறையாக, சென்னை மாநகராட்சி மேயர் பதவியை, ஒரு பெண் பொறுப்பேற்றுள்ளார்.. முதல் பட்டியலின பெண் மேயராகவும் பிரியா பதவியில் அமர வைக்கப்பட்டுள்ளார்.

பெண்மொழி
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பெண்மொழி என்ற தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்டம்,எழும்பூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வேலு தலைமை தாங்கினார்.. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார்... இந்த நிகழ்ச்சியில் புதிதாக தேர்வு செய்யப்பட்டசென்னை மேயர் ப்ரியா ராஜன் மற்றும் மாநகராட்சி மன்ற பெண் கவுன்சிலர்களை வாழ்த்தி, திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி பேசினார்.

அர்ச்சகர் ஆக்கும் திட்டம்
அப்போது அவர் பேசும்போது, "முதல்வர் ஸ்டாலின் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்... இதன் மூலம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரது கனவு நிறைவேறியுள்ளது. இதன் அடுத்த கட்டமாக பெண்களையும் அர்ச்சகர்களாக்க வேண்டும். அந்த காலம் வெகுதூரம் இல்லை. இப்போது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் கிடைத்திருக்கிறது.

பெண்கள்
எத்தனையோ தடைகளை தாண்டி உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. இதை நீங்கள் சரியானமுறையில் பயன்படுத்த வேண்டும். அனைத்து பெண் கவுன்சிலர்களும் தங்கள் கடமைகளை நிறைவேற்றும் திறன் கொண்டவர்கள், சில சமயங்களில் ஆண் கவுன்சிலர்களை விடவும் சிறப்பாக பணியாற்றக் கூடியவர்கள்

அண்ணன் - அப்பா
அடுத்த தலைமுறையில் உள்ள உங்கள் மகளுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும்... அண்ணன் இருக்கிறார்.. கணவர் இருக்கிறார்,.. அப்பாவும் மகனும் இருக்கிறார்.. அவர்கள் பார்த்துக்கொள்வார் என்று விடக்கூடாது.. இது உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு.. உங்களால் நிச்சயம் முடியும் நீங்கள் ஆளுமை பண்புடன் சிறந்த முறையில் நிர்வாகத்தை நடத்தி செல்ல வேண்டும்" என்றார்.

சிறப்பு பயிற்சி
இதனிடையே, கவுன்சிலர் என்பவர் யார், அவர்களுக்கான பணிகள் என்னென்ன என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விளக்கும் வகையில், 200 கவுன்சிலர்களுக்கும் மாநகராட்சி சிறப்பு பயிற்சி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.. பெண் கவுன்சிலர்களின் குடும்ப உறுப்பினர்கள் நிழல் கவுன்சிலர்களாக வலம் வருவதை தடுத்து மக்களிடம் நன்மதிப்பை பெறுவது எப்படி என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா












Click it and Unblock the Notifications