"ரோல்மாடல்" கனிமொழி.. 181 ஹெல்ப் லைன், பெருகும் பெண்களுக்கான விழிப்புணர்வு: மகளிர் ஆணைய தலைவர் தகவல்
கனிமொழி பெண்களுக்கே ரோல் மாடலாக திகழ்கிறார் என மகளிர் ஆணைய தலைவர் புகழாரம்
சென்னை: திமுக எம்பி கனிமொழி மனிதநேயமிக்கவர்.. அனைத்து பெண்களுக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார் என்று மகளிர் ஆணைய தலைவர் குமரி விஜயகுமார் நெகிழ்ந்து தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழகத்தில், பெண்களின் பாதுகாப்புகள் குறித்த விழிப்புணர்வுகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
திமுக துணைப்பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகிகள் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்கள்..
அந்தவகையில், நாமக்கல் மாவட்டம் சார்பிலும் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.. நாமக்கல் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் கே.மோகன் ஏற்பாட்டின்பேரில், சென்னை, கீழ்ப்பாக்கம், ஹால்ஸ்ரோட்டில் அமைந்துள்ள தி சொசைட்டி ஆப் மேரி இம்மாகுலேட், மெர்ஸி ஹோமில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

ஹோம்
இதில், திமுக மாநில மகளிரணி இணைச்செயலாளரும், மகளிர் ஆணையத்தின் தலைவருமான குமரி விஜயகுமார், இதில் பங்கேற்று, முதியோர்கள் அனைவருக்கும் உணவு வழங்கினார்.. சென்னை மாமன்ற உறுப்பினரும், கழக மகளிரணி பிரச்சாரக்குழு செயலாளருமான, கே.ராணி ரவிச்சந்திரன், சென்னை மாமன்ற உறுப்பினரும், மகளிர் அணி-சமூக வலைதள பொறுப்பாளருமான, ரத்னா லோகேஷ்வரன், தி.இந்து தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.கமலநாதன், சென்னை தென்மேற்கு மாவட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினர் மயிலை வேலுசம்பந்தன், வி.சதிஷ் கலைஞர் தமிழ்ப்பேரவை சென்னை மண்டல அமைப்பாளர் ஆகியோர்களின் முன்னிலையில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

ரோல்மாடல்
இதுகுறித்து மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி விஜயகுமார் நம்மிடம் பூரித்து சொல்லும்போது, "திமுக எம்பி கனிமொழி மனிதநேயமிக்கவர்.. அனைத்து பெண்களுக்கும் ரோல் மாடலாக திகழ்ந்து வருபவர்.. எளிய மக்களிடம் கனிவாக பேசக்கூடியவர்.. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, முதியோர்களுக்கு உணவு வழங்கினோம்.. முதியவர்கள், பெண்கள் என பலரும் தங்கி உள்ள இந்த ஹோமிற்கு, ஏற்கனவே பொங்கல் பண்டிகையின்போது இங்கு வந்திருந்தேன்.. புத்தாடைகள் உட்பட இனிப்புகளை வழங்கினோம்.

நெகிழ்ச்சி
இப்போது மீண்டும் எங்களை பார்த்ததும் முதியவர்கள், கைகளை தட்டி வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.. மிகுந்த மகிழ்ச்சியான தருணமாக அது அமைந்தது.. அப்போது முதியவர்களுக்கான சட்டங்கள், பாதுகாப்புகள் குறித்து அவர்களிடம் எடுத்து சொன்னோம்.. இதைதவிர, மகளிர் ஆணையம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யப்பட்டு வருகிறது. பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது குறிப்பிட்ட நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால், அது குறித்த நடவடிக்கையையும் துரிதப்படுத்தி உள்ளோம்.

ப்ளாக் ஸ்பாட்
பெண்களுக்கு அரசு தரும் திட்டங்கள், மற்றும் பெண்களுக்கான சட்டங்களை, அவர்களிடம் எடுத்து சொல்லப்பட்டு வருகிறது. குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் இடங்களை"ப்ளாக் ஸ்பாட்" என்போம்.. இந்த மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், 181 ஹெல்ப் லைன் பற்றி பெண்களிடம் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.. ஆதரவற்ற, முதியோர் இல்லம், மற்றும் பெண்கள் தங்கும் விடுதி குறிப்பாக, எஸ்சிஎஸ்டி விடுதிகளில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதா? சாப்பாடு தரமானதாக இருக்கிறதா என்றெல்லாம் ஆய்வு செய்து வருகிறோம்.. தமிழகம் முழுவதும் சிறப்பான மாவட்ட கலெக்டர்கள் இருப்பதால், குறைகள் ஏதேனும் இருந்தாலும், அதை உடனடியாக நிவர்த்தி செய்துவிடுகிறார்கள்" என்றார்.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்: கார்த்திக் மோகன் Vs ஆதவ் அர்ஜுனா... களம் காணும் ‘யங் பிளட்’ பாலிடிக்ஸ்! -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
ஒரே சமூகம்.. ஓட்டுகளை பிரிக்கும் சுந்தர் சி.. பிடிஆருக்கு செம டஃப்.. திடீர் வேட்பாளர் ஆனது எப்படி? -
4 மேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்.. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் மெகா ட்விஸ்ட்! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
கள்ளக்குறிச்சி, பெரியகுளம் உள்பட விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை! வெளியானது பட்டியல் -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை?












Click it and Unblock the Notifications