சிறப்பு ரயில்களில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டண சலுகையை ரத்து செய்வதா? கனிமொழி எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிறப்பு ரயில்களில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டண சலுகையை ரத்து செய்துள்ளதற்கு திமுக லோக்சபா எம்.பி. கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மனிதாபிமானமற்றது.

பொதுமுடக்கம் காரணமாக, வருவாய் இன்றி, நாடு முழுக்க பலர் அவதிப்பட்டு வரும் நிலையில், முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுக்கபட்டு வந்த இந்த சிறிய சலுகையைக் கூட மத்திய அரசு ரத்து செய்திருப்பது, நியாயமில்லை.

இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications