கணீர்மொழியால் கவனம் ஈர்த்த கனிமொழி! ''துணிச்சல்மிக்க தமிழ் பெண்''! எல்லை கடந்து கிடைத்த பாராட்டு!
நாடாளுமன்ற உரை மூலம் கவனம் ஈர்த்த கனிமொழி.
சென்னை: இந்தி திணிப்புக்கு எதிரான தனது நாடாளுமன்ற உரையின் மூலம் தேசியளவில் கவனம் ஈர்த்திருக்கிறார் கனிமொழி எம்.பி.
கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த அரசியல் விமர்சகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கனிமொழியை 'துணிச்சல் மிக்க தமிழ் பெண்' எனக் குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறார்கள்.
இதேபோல் கனிமொழி, சுப்ரியா சுலே, மஹுவாமொய்த்ரா ஆகிய 3 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் அவர்களது நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

சமஸ்கிருதம்
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் பேசிய கனிமொழி எம்.பி. ,மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்துக்கு ரூ.198 கோடி நிதியும், தமிழ் மத்திய செம்மொழி ஆய்வு மையத்துக்கு பதினொன்றே முக்கால் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டதை ஒப்பிட்டார். பிரதமர் மோடி தமிழின் பெருமையை பேசினால் மட்டும் போதுமா நிதி ஒதுக்கீட்டில் அல்லவா அதை காட்டியிருக்க வேண்டும் எனக் கூறினார். அதுமட்டுமல்லாமல் இந்தி திணிப்பு குறித்தும் அப்போது பேசினார்.

சிலை திறப்பு
கனிமொழியின் இந்தப் பேச்சு தேசியளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு அவருக்கு பாராட்டுக்களையும் தேடி தந்திருக்கிறது. அண்மைக் காலமாக தமிழ்நாடு கடந்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார். இப்போது கூட நாளை மறுநாள் ஆந்திர மாநிலம் குண்டூரில் ஜேபி சிலையை திறந்து வைக்குமாறு கனிமொழிக்கு அழைப்பு வந்திருக்கிறது.

தேதி கொடுக்கவில்லை
ஆனால் தனக்கிருக்கும் பணிச்சுமை காரணமாக அந்த விழாவில் பங்கேற்க தேதி கொடுக்க இயலாது எனக் கூறியிருக்கிறார் கனிமொழி. இப்படியாக எல்லைகள் கடந்து தனக்கான அரசியல் அடையாளத்தை விரிவுப்படுத்தி வருகிறார் கனிமொழி எம்.பி. அதேபோல் ஆளுநருக்கு எதிரான அவரது நாடாளுமன்ற பேச்சும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சியினர், விமர்சகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.

திமுக எம்.பி.க்கள்
பேசி பேசியே வளர்ந்த இயக்கம் திமுக என்பதால் அக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பேச சொல்லித் தர வேண்டியது இல்லை. அண்மையில் கூட திருச்சி சிவா கூறிய உப்புமா கதை மாநிலங்களவை தலைவரையே விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் படி அமைந்திருந்தது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications