யார் எட்டப்பர்கள்னு மக்களுக்கு தெரியும்! ராகுலுக்கு கனிமொழி பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: யார் எட்டப்பர்கள் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர், யார் மக்களுடன் துணை நிற்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும் என திமுக துணை பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி, ராகுலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடத்தியுள்ளார்.

kanimozhi rahul gandhi

ஆனால் அதன் காரணம் சரியாக தெரியவில்லை.
2025 இல் தொகுதி மறு வரையறை குறித்து அனைத்து கட்சி கருத்துக்களை தெரிந்து கொள்வதற்காக மு க ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும்போது கூட்டத்தை நடத்தியுள்ளார்கள்.

அந்தக் கூட்டத்தில் தவெக சார்பில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டு அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டுள்ளார்.

அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி கட்டிலில் இருந்த போது மற்ற கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறார்கள்

அந்த தீர்மானத்திற்கும் இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் எடுத்துள்ள முடிவிற்கும் என்ன வித்தியாசம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

எங்களது தீர்மானத்தில் அடிப்படையில் போன முறை மசோதா கொண்டு வந்த போது எங்களால் எதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை மிகத் தெளிவாக எடுத்து கூறினோம்.

தலைமைச் செயலாளர் யாருக்காக வேலை செய்து கொண்டிருக்கிறார் தமிழ்நாடு அரசு தமிழக வெற்றி கழகத்திற்காக? எந்த தேவையும் இல்லாத நேரத்தில் எத்தனையோ பிரச்சனை இருக்கிறது. மேகதாது பிரச்சனை மிக மோசமாக போய்க் கொண்டிருக்க கூடிய சூழலில் அதை திசை திருப்பக் கூடிய ஒரு எண்ணத்தோடு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை எங்களது கோரிக்கை . மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கொண்டு வந்தால் நமக்கு மிகப்பெரிய பாதிப்பு இருக்கும். மக்கள் தொகை அடிப்படையில் அதை கணக்கீடு செய்யக் கூடாது

தமிழ்நாட்டுக்கு எந்த விதத்திலும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைந்து விடக்கூடாது, நாம் மக்கள் தொகையை குறைத்துள்ளதற்காக பழி வாங்கப்படக் கூடாது என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்து.

யார் எட்டப்பர்கள் (காங்கிரஸ் )என்று தமிழ்நாடு மக்களுக்கு தெரியும். தேர்தலுக்கு பிறகு அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று அனைவருக்கும் தெரியும். அது போல் யார் மக்களுக்கு மதிப்பு கொடுத்திருக்கிறார்கள் என்பதும் தெரியும்.

புதியதாக ஆட்சி அமைத்துள்ள தவெக, அனைத்து கட்சித் தலைவர்களை அழைத்துச் சென்று கர்நாடகாவில் உள்ள நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மேகதாது பிரச்சனை குறித்து பேசுவது என்றால் அவர்களுடன் செல்வதற்கு திமுக தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழகம் வந்த ராகுல் காந்தி, "தொகுதி மறுவரையறை வாயிலாக தமிழக மக்களின் உரிமையை பறிக்க பாஜக அரசு சதி செய்கிறது. தமிழகத்தில் எட்டப்பன் என்ற ஒரு முக்கிய கதாபாத்திரம் உள்ளது. அந்தப் பெயர் துரோகத்தின் அடையாளமாக இருக்கிறது. யாராவது தமிழகத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கின்றார்கள் என்றால், அவர்கள்தான் துரோகிகள் என அவர் பேசியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+