Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"புறம் காத்தது போதும், அகம் காக்க வா"! "தலைமைச் செயலகத்தில்" கனிமொழி! அப்போ அது கன்பார்ம்தானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்பி கனிமொழியின் பிறந்தநாளையொட்டி "புறம் காத்தது போதும், அகம் காக்க வா" என்ற வாசகம் கொண்ட கேக்கை அவரது ஆதரவாளர்கள் வெட்டி கொண்டாடினர். மேலும் "திராவிடத் தலைவி, அக்கா கனிமொழி" என்ற முழக்கங்களையும் எழுப்பினர்.

கனிமொழியின் 56 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. கனிமொழி 2ஆவது முறையாக தூத்துக்குடியில் போட்டியிட்டு எம்பியாக வெற்றி பெற்றுள்ளார். அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போதே தமிழக உரிமைகளுக்காக போராடி வருகிறார்.

kanimozhi dmk

இந்த நிலையில் அவரது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய கனிமொழி அங்கு ஆசி பெற்றார். பின்னர் தனது அண்ணனும் முதல்வருமான ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு சென்று அண்ணன் ஸ்டாலினை, அண்ணி துர்கா ஸ்டாலினிடம் ஆசியையும் வாழ்த்துகளையும் பெற்றார்.

சிஐடி காலனி வீடு

இதையடுத்து அவருடைய சிஐடி இல்லத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழியின் ஆதரவாளர்கள் கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை நேரில் சந்தித்து தெரிவித்து வருகிறார்கள். அது போல் அவரது வீட்டு வாசலில் கேக் வெட்டி கொண்டாடியும் மகிழ்கிறார்கள்.

20 கிலோ கேக்

அந்த வகையில் 20 கிலோ கேக்கை கொண்டு வந்தனர். அதில் தமிழக சட்டசபை கட்டடமும் ஸ்டாலின், கனிமொழி புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன.

kanimozhi dmk

முக்கிய வாசகம்

மேலும் "புறம் காத்தது போதும், அகம் காக்க வா" என கேக்கில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது. அதாவது வரும் சட்டசபை தேர்தலில் கனிமொழி போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள். அப்படி போட்டியிட்டு எம்எல்ஏவாகி முக்கிய அமைச்சரவையில் அவர் இடம் பெற வேண்டும் என்பதை விரும்புகிறார்கள்.

தெற்கில் ஒரு சூரியன்

அது போல் தெற்கில் இருந்து மீண்டும் ஒரு சூரியன் என்ற வாசகம் அடங்கிய ஒரு போஸ்டரும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் தமிழக அரசு தலைமைச் செயலகத்தின் கட்டடம் இடம்பெற்றிருந்தது.

குமரி

தற்போது குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 தென் மாவட்டங்களில் பொறுப்பாளராக கனிமொழி இருந்து வருகிறார். அத்துடன் திமுக துணை பொதுச் செயலாளர், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

கனிமொழிக்கு முக்கியத்துவம்

திமுகவில் கனிமொழிக்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் என்பது கூடிக் கொண்டே போகிறது. இது அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கனிமொழி வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார், திமுக அமைச்சரவையில் இடம் பெறுகிறார் என செய்திகள் கிடைத்தன.

ஐடியா இருக்கிறதா

ஆனால் இதை கனிமொழி தரப்பினர் மறுத்தனர். இதுவரை அப்படி எந்தவித ஐடியாவும் இல்லை என்றனர். ஆனால் தற்போது கனிமொழி ஆதரவாளர்களின் எண்ணம், அவரது சேவை தமிழக அரசியலுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தேவை என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.

இடைத்தேர்தல் எப்போது

கடந்த 2024 ஆம் ஆண்டுதான் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்டு கனிமொழி வெற்றி பெற்று தூத்துக்குடி எம்பியாக இருந்து வருகிறார். நாடாளுமன்ற திமுக எம்பிக்கள் குழுவின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

நம்பிக்கைக்குரியவர்

மேலும் டெல்லியில் திமுக சார்பில் நம்பிக்கைக்குரிய ஒருவர் வேண்டும் என்பதால்தான். அவர் கனிமொழிதான் என திமுக தலைமை கருதுவதால் அவர் நாடாளுமன்றத்தில் இருக்கவே திமுக தலைமை விரும்புவதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்தில் கனிமொழியின் முக்கிய பேச்சுகளுக்கும் தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பான விவாதங்களுக்கும் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து வருகிறார்.

போட்டியிடுவாரா

என்ன இருந்தாலும் திமுக தலைமை கனிமொழியை சட்டசபை தேர்தலில் போட்டியிட சொன்னால் அவர் நிச்சயம் போட்டியிடுவார் என்றே கூறுகிறார்கள். இது தொடர்பான ஆலோசனைகள் நடக்கும் பட்சத்தில் தூத்துக்குடி நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல், தமிழக சட்டசபை தேர்தலுடன் நடத்தப்படும் என சொல்லப்படுகிறது. மேலும் கனிமொழி தென் மண்டல பொறுப்பாளராக இருந்து வருவதாக அங்குள்ள சட்டசபை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும் அப்பகுதியை சேர்ந்த கனிமொழியின் ஆதரவாளர்கள் விரும்புவதாக சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+