"புள்ளி" வைத்த கனிமொழி.. "கோலம்" போட்ட உதயநிதி.. மலைத்து பார்க்கும் பாஜக.. சிலிர்த்து எழுந்த திமுக
இந்தி திணிப்பை எதிர்த்து உதயநிதி பேசிய பேச்சு டெல்லியை அதிர வைத்துள்ளது
சென்னை: "நீங்கள் எந்த வழியில் இந்தியை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தாலும், நாங்கள் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை "இந்தி தெரியாது போடா" அதை எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருப்போம்" என்று கூறி உதயநிதி ஸ்டாலின் டெல்லியை அதிர வைத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்றது.
இதில் 112 பரிந்துரைகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் பெரும்பாலும் இந்தி திணிப்பு முயற்சியாகவே இருப்பதாக பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

வள்ளுவர் கோட்டம்
இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாணவரணி, இளைஞரணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், இன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது உதயநிதி பேசிய பேச்சின் சுருக்கம் இது:

ஓ.. ஓபிஎஸ் எடப்பாடி
இந்த ஆர்ப்பாட்டத்திற்கான உத்தரவை நேற்று முன்தினம்தான், முதல்வர் ஸ்டாலின் இளைஞரணிக்கு பிறப்பித்தார்.. ஆனால், ஒரே நாளில் இவ்வளவு பெரிய கூட்டத்தை திமுக கூட்டியிருக்கிறது. ஒன்றியம் என்று சொன்னால் தான் கோபம் வரும். அதனால் அப்படியே அழைக்கிறேன். ஒன்றிய அரசின் பிரதமர் மோடி அவர்களே... உள்துறை அமைச்சர் அவர்களே.. நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல இங்கு நடந்து கொண்டிருப்பது எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ, ஓ.பன்னீர் செல்வம் ஆட்சியோ இல்லை. இப்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருப்பவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

டி-ஷர்ட்
நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது வெறும் ஆர்ப்பாட்டம் தான் நடத்தி இருக்கிறோம். இது போராட்டமாக மாற வேண்டுமா வேண்டாமா என்பது உங்கள் கையில் இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியமான கொள்கையில் ஒன்று இந்தி திணிப்பை எப்பொழுதும் எதிர்ப்போம் என்பதுதான். அதிலிருந்து சற்றும் விட்டுக் கொடுக்க மாட்டோம். நீங்கள் எந்த வழியில் இந்தியை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தாலும், நாங்கள் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை "இந்தி தெரியாது போடா" அதை எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருப்போம்.

கலைஞர் போட்டோ
நீங்கள் மீண்டும் இந்தி திணிப்பை கையில் எடுத்தால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தலைவரின் அனுமதியுடன் டெல்லியில், உங்கள் அலுவலகத்தின் முன்பு எங்கள் போராட்டம் நடக்கும். 2 நாள்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அந்தப் போராட்டத்தில் அண்ணாவின், கலைஞரின் புகைப்படத்தை எடுத்துச் சென்று இருக்கிறார்கள். எனவே, தமிழ்நாடு மக்கள் என்றுமே இந்தி திணிப்பை ஏற்க மாட்டார்கள். 2019-ல் பாஜகவை விரட்டியதுபோல், 2024-லும் மீண்டும் விரட்டியடிப்பார்கள்" என்றார்.

சேற்றில்.. ஒன்று..
உதயநிதியின் இந்த பேச்சு பாஜக தரப்பை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அத்துடன், திமுக தரப்பில் மிகுந்த தெம்பை இந்த பேச்சு ஏற்படுத்தி வருகிறது.. காரணம், சமீபகாலமாகவே, மத்திய பாஜகவுக்கு திமுக அடங்கி போவதாகவும், தன்னுடைய வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய முடியாமல் தடுமாறி வருவதாகவும், அதனால்தான், ஆர்எஸ்எஸ் பேரணிக்குகூட தடையை கேட்க முடியாமல், மென்று விழுங்கியதாகவும் ஒரு குற்றச்சாட்டு திமுக அரசு மீது கிளம்பியது.. அப்படியானால், பாஜகவுக்கு திமுக பயப்படுகிறதா? மென்மை போக்கை அக்கட்சியுடன் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு ஏன் ஏற்பட்டுள்ளது? எடப்பாடி ஆட்சி காலத்தில் கூட, ஆர்எஸ்எஸ்ஸுக்கு இவ்வளவு துணிச்சல் வந்ததில்லையே? என்றெல்லாம் கேள்விக்கணைகள் திமுக மீது பாய்ந்தன.

திருமாவளவன்
சில நாட்களுக்கு முன்பு, விசிக தலைவர் திருமாவளவன், நம் ஒன் இந்தியாவுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அவரிடமும் இந்த சந்தேகத்தை நாம் முன்வைத்தோம்.. அதற்கு திருமாவளவன், "திமுக பதில் சொல்லி கொண்டிருக்கும் அளவுக்கு பாஜகவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தர தேவையில்லை, "சேற்றில் புரண்டு எழுந்து வரும் ஒன்று" என்று முதல்வர் அறிக்கையில் சொல்லி உள்ளாரே.. இதுவே போதுமானது.. ஸ்டாலின் சரியாகவே பாஜகவை கையாள்கிறார்" என்று பதில் தந்திருந்தார்.

கனிமொழி எம்பி
பாஜக எதிர்ப்புக்கு இன்னொரு உதாரணமாகத்தான், இன்றைய உதயநிதி பேச்சும் பார்க்கப்பட்டு வருகிறது.. வழக்கம்போல் இல்லாமல், உதயநிதி சற்று காட்டமாகவும், காரமாகவும் பாஜகவை இடித்து பேசியிருந்தது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்து வருகிறது.. ஏற்கனவே இந்தி மொழிக்கு எதிரான தன்னுடைய எதிர்ப்புகளை திமுக தொடர்ந்து பதிவு செய்து வந்தாலும், எம்பி தேர்தல் நெருங்கும் நிலையில், ஏதாவது ஒரு குழப்பத்தை தமிழகத்தில் கொளுத்தி போட, இந்துத்துவா சக்திகள் ஆலாய் பறந்து வருகிறது.. அதற்கான ஆயுதமாகவே மீண்டும் ஹிந்தியை அமித்ஷா கையில் எடுக்க, இதே வேகத்தோடு தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ததுடன், டெல்லிக்கு வந்து போராட்டுமா? என்று அமித்ஷாவின் பெயரை சொல்லியே கேள்வி எழுப்பியுள்ளார் உதயநிதி.

கனிமொழி
அதேசமயம், இந்த இந்த நேரத்தில் கனிமொழியை நினைவுகூராமல் நம்மால் இருக்க முடியாது.. காரணம், இத்தகைய எதிர்ப்பு போராட்டங்களுக்கு தொடக்கபுள்ளியாக இருப்பது திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதிதான்.. இந்தி திணிப்புக்கு எதிராக, தமிழக அரசியல் களம் எப்போதும் தகித்துவருவது வரலாறுதான்.. இப்படி நீறுபூத்த நெருப்பாக அமிழ்ந்துகிடந்த இந்த அனலை மீண்டும் விசிறிவிட்டிருக்கிறது, கனிமொழிதான் என்பதை மறுக்க முடியாது..

யுவன் சங்கர் ராஜா
சில வருடங்களுக்கு முன்பு, #ஹிந்தி_ தெரியாது_போடா #StopHindiImposition என்கிற ஹாஷ்டாக் மூலம் அன்று (06/09/2020) திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, தன்னுடைய ஃபேஸ்புக் வாயிலாக பதிவிட்டார். இதற்கு பிறகுதான், யுவன்சங்கர் ராஜா, மெட்ரோ' பட நடிகர் சிரிஷ் மற்றும் சினிமா பிரபலங்கள் I am a தமிழ் பேசும் Indian', இந்தி தெரியாது போடா' என்ற வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட்களை அணிந்திருந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்திருந்தனர்.. தமிழ்நாடு மட்டும் இல்லாமல், இந்திய முழுவதும் இந்தி திணிப்பு எதிராக ஒருவகையில் வித்திட்டது, கனிமொழியின் ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகம்தான்.. ஆக, அன்று கனிமொழி வைத்த புள்ளியில், உதயநிதி கோலம் போட்டு, டெல்லியை கலங்கடித்து வருகிறார்.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications