Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொண்டாடும் மன நிலையில் நான் இல்லை.. கனிமொழி திடீர் ட்வீட்

பிறந்தநாளை முன்னிட்டு, கனிமொழி ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பிறந்த நாள் கொண்டாடும் மன நிலையில் இல்லை: கனிமொழி ட்வீட்-வீடியோ

    சென்னை: கனிமொழி ஏன் இப்படி ஒரு ட்வீட்டை போட்டிருக்கிறார் என்றே தெரியவில்லை.

    தினந்தோறும் இல்லாவிட்டாலும், எம்பியும், திமுக மகளிர் அணி தலைவியுமான கனிமொழி போடும் ட்வீட் பெரிதாகவே கவனிக்கப்படும். சில சமயங்களில் இவரது ட்வீட்க்கு அர்த்தம் எளிதாக புரியவும் புரியாது.

    இன்னும் கொஞ்சம் நாளில் இவரது பதவிக்காலம் முடிய உள்ளது. எனவே தூத்துக்குடி தொகுதியில் இவரை நிறுத்தலாமா என்று அக்கட்சி ஆலோசித்து வருகிறது.

    வேண்டுகோள்

    வேண்டுகோள்

    இந்நிலையில் இவருக்கு நாளை பிறந்தநாள். ஆனால் தனது பிறந்தநாளை கொண்டாடும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக ஒரு ட்வீட்டினை போட்டு தனது வேண்டுகோளையும் பதிவிட்டுள்ளார்.

    தவிர்க்க வேண்டும்

    தவிர்க்க வேண்டும்

    அதில், "எனது பிறந்த நாளையொட்டி சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாக அறிகிறேன். கழகத் தோழர்கள் இதனை கண்டிப்பாக தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    வரவேண்டாம்

    எனது பிறந்த நாளை கொண்டாடும் எண்ணம் இல்லை. நண்பர்கள் இதை புரிந்துக் கொண்டு நேரில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

    தொண்டர்கள் வாழ்த்து

    தொண்டர்கள் வாழ்த்து

    ஆனால் எப்பவுமே கனிமொழியின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படும். போன வருஷம் கூட, அவரது பிறந்த நாளை கட்சியின் மகளிர் அமைப்பினர் முதல் தொண்டர்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடினார்கள். வெகுதூரத்திலிருந்து வந்திருந்த திமுக தொண்டர்கள் கனிமொழியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை சொன்னார்கள்.

    கருணாநிதி மரணம்

    கருணாநிதி மரணம்

    ஆனால் இந்த ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் எண்ணம் இல்லை என்று பகிரங்கமாகவே சொல்லிவிட்ட காரணம் ஏன் என தெரியவில்லை. ஒருவேளை கருணாநிதியின் மரணம் தன்னை ரொம்பவே பாதித்திருப்பதால், இப்படி ஒரு முடிவை கனிமொழி எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+