ஒரு வார்த்தை ட்வீட்.. கனிமொழி, விஜயகாந்த் போட்ட ஒற்றை வார்த்தை என்ன தெரியுமா?
சென்னை: உலகம் முழுவதும் டிரெண்டான ஒற்றை வார்த்தை ட்வீட் தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் திமுக எம்பி கனிமொழியும் அதில் இணைந்து உள்ளனர்.
சமூக வலைதளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு சேலஞ்ச் டிரெண்டாகி வருவது வழக்கம். யாராவது ஒருவர் ஏதோ ஒரு நாட்டில் இருந்துகொண்டு தொடங்கி வைக்கும் ஒரு விசயம் டிரெண்டாகி உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.
அந்த வகையில்தான் நேற்று முதல் ஒரு வார்த்தை சேலஞ்ச் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் தனியார் ரயில் சேவை நிறுவனமான ஆம்டிராக், இன்று காலை தனது ட்விட்டரில் "trains" என்று ஒற்றை வார்த்தையில் ட்வீட் செய்தது.

உலக டிரெண்ட்
பல்லாயிரக்கணக்கானோரால் ரீட்வீட் செய்யப்பட்ட இந்த பதிவை பின் தொடர்ந்து பலரும் பதிவிட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த சி.என்.என். ஊடகம் பிரேக்கிங் நியூஸ் என ட்விட்டரில் பதிவிட்டதன் மூலம் இந்த டிரெண்டிங் உலகம் முழுவதும் வைரலானது. இதை தொடர்ந்து நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் யுனிவர்ஸ் என்று ட்விட்டரில் பதிவிட்டது.

மு.க.ஸ்டாலின்
இது தமிழ்நாட்டில் டிரெண்டாக முக்கிய காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் திராவிடம் என்று பதிவிட்டு ஒற்றை வார்த்தையின் தன்னுடைய கொள்கையையும் செயல்பாடுகளையும் வெளிப்படுத்தினார். அவரை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு என்றும், திருமாவளவன் சனநாயகம் என்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தனர்.

அரசியல் தலைவர்கள்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்த்தேசியம் என்றும், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனம் ராமதாஸ் எனவும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழன் என்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தனர். அவரவர் பதிவிட்ட வார்த்தைகளை வைத்து விமர்சனங்களும், கருத்துக்களையும் நெட்டிசன்கள் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

கனிமொழி, விஜயகாந்த்
இந்த நிலையில் தற்போது இந்த டிரெண்டிங்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும், திமுக எம்பி கனிமொழியும் இணைந்து உள்ளனர். கனிமொழி ட்விட்டரில் பெரியார் என்று பதிவிட்டு இருக்கிறார். தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் #வறுமைஒழிப்பு என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஒற்றை வார்த்தை பதிய வேண்டும் என்ற நிலையில் விஜயகாந்த் 2 வார்த்தைகளை ஒரே வார்த்தையாக பதிவிட்டுள்ளார்.
-
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
தவெக அமைச்சரவையில் வெளியேறுவோம்.. திருமாவளவன் மீண்டும் ட்விஸ்ட்.. விஜய் ஷாக் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
அரசுனு ஏதாவது இருக்கா.. கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் கொடுமை சம்பவம்.. கனிமொழி காட்டமான கேள்வி -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications