கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்.. திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது.. அண்ணாமலை பரபர பேச்சு
கோவை: திமுக தோல்வியடைந்தால் கனிமொழி தனிக் கட்சி தொடங்குவார் என்றும், திமுக நாலாபுறமாக சிதறிவிடும் என்றும், கோவை வடக்கு, தெற்கு தொகுதியில் தோல்வி பயத்தால் திமுகவினர் உலர ஆரம்பித்து உள்ளனர் என்றும் அண்ணாமலை பேசினார். செந்தில் பாலாஜி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, தரம் தாழ்ந்து பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பாஜக அண்ணாமலையும் இன்று கோவையில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், கோவை வடக்கு தொகுதி வேட்பாளரும், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனை எம்எல்ஏ வை ஆதரித்து கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகே பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-

செந்தில் பாலாஜிக்கு பதிலடி
முதல்வர் ஸ்டாலின் அன்பான வார்த்தைகளை பயன்படுத்தவும், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி அக்கா யாராவது எதிர்த்து பேசினால் மலர் வளையம் வைத்து விடுவதாக பேசுகிறார்கள். கோவையில் செந்தில் பாலாஜி டவுசர் என்று எல்லாம் தரம் தாழ்த்தி பேசுகிறார்கள். இந்த விமர்சனத்திற்கு நான் பதில் சொல்ல தயாராக இல்லை. அவர்களுக்கு தோல்வி பயத்தில் உளற ஆரம்பித்து இருக்கிறார்கள்.. அதைப் பற்றி கண்டு கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.
471 நாள் புழல் சிறையில் இருந்து விட்டு வந்து இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்றோ? நாளையோ? இருக்கிறது. அவர்களுக்கும் தெரியும், எத்தனை நாள் உள்ள போலாம் என்று, அதனால் அவர்கள் நன்றாக இருக்கட்டும், நாங்கள் எங்கள் பணியை தொண்டனாக செய்கிறோம். அரசியலில் சகிப்புத்தன்மை அதிகமாக வேண்டும்.. அண்ணன் திருமாவளவன் எப்பொழுதும் பொறுமையாக இருக்கக் கூடியவர், அவரும் அந்த தவறை செய்கிறார். அதையும் நாம் பார்க்கிறோம், விஜய் அவர்கள் புதிதாக வந்து உள்ளார், அதனால் சகிப்புத்தன்மை வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
ஜனநாயகன் படம்
ஜனநாயகன் படம் லீக் ஆனது ரொம்ப தவறானது. தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம் தர வேண்டும். காரணம் வந்து இருக்கக் கூடிய ஒரு நிமிஷம் முழு படம் என்கிறார்கள். நான் தேர்தலுக்குப் பின்பு ஜனநாயகன் திரைப்படத்தை திரையரங்கிற்கு சென்று பார்ப்பேன். நான் விஜய் திரைப்படம் ஜனநாயகனை ஒரு ரசிகனாக திரையரங்கு சென்று பார்ப்பேன். அதனால் தயவு செய்து பொதுமக்கள் இதுபோன்று வந்தால் பார்க்காதீர்கள்.. எத்தனையோ பேரின் உழைப்பு, ரத்தம், வியர்வை தயாரிப்பு நிறுவனத்தின் பணம், அதுபோல் வந்தாலும் பார்க்க வேண்டாம், யாராவது அனுப்பினாலும் பார்க்க வேண்டாம்.
கனிமொழி தனிக்கட்சி ஆரம்பிப்பார்
அதே நேரத்தில் தமிழகத்தில் தேவையில்லாமல் முருகன், மத்திய அமைச்சருடைய பெயரை உள்ளே இழுப்பது அரசியல் அநாகரீகம்.. யார் தவறு செய்தார்களோ ? காவல் துறையிடம் புகார் அளித்து அவர்களை உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டுங்கள். ஆதவ் அர்ஜுனா அவர்களும், த.வெ.கவினர் சமூக வலைதள பக்கத்தில் சொல்லக் கூடிய கருத்தையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
வரும் 2026 தேர்தலில் திமுக தோற்றால், கனிமொழி தனிக்கட்சி ஆரம்பித்துவிடுவார். முதல்வர் ஸ்டாலின் மற்றொரு பக்கம் சென்றுவிடுவார். அதன் பிறகு திமுக யாரிடம் செல்லும் என்றே சொல்ல முடியாது. அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலும் தற்போது வெளியே வந்து கொண்டிருக்கிறது. திமுக இனி எக்காலத்திலும் ஆட்சிக்கு வராது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications