கண்ணாடி இழைப் பாலத்தில் விழுந்த சுத்தியல்.. விரிசலுக்கு காரணம் இது தான்! அமைச்சர் எவ வேலு விளக்கம்
சென்னை: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் சிலைக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலம் சேதமடைந்துள்ளதாகவும் அதில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அந்த பாலம் உறுதியாக இருப்பதாகவும், ஒரே நேரத்தில் 650 பேர் கூட நிற்கலாம் என விளக்கம் அளித்துள்ளார் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான எ.வ.வேலு.
தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் புகழ்பெற்ற சுற்றுலா மாவட்டம் கன்னியாகுமரி. கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளைக் காண்பதற்காகவே அங்கு ஆயிரக்கணக்கான பயணிகள் நாள்தோறும் வருகின்றனர்.
குறிப்பாக கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையைக் காண்பதற்காகவே அங்கு அதிக பயணிகள் வருகின்றனர். மேலும் அங்கிருந்து சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்த்து ரசிக்க முடியும் என்பதால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கன்னியாகுமரி பாலம்
இந்த நிலையில் கன்னியாகுமரிக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழைப் பாலம் அமைக்கப்பட்டது. அதனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இயற்கை எழில் கொஞ்சும் கடல் பகுதியில் கண்ணாடி பாலத்தின் மேல் நடப்பது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. இதை அடுத்து அந்த பாலத்தில் பயணிப்பதற்காகவே அங்கு சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கினர். இந்த நிலையில் திடீரென கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. பாலத்தின் உறுதித்தன்மை குறித்து அதிமுகவும் குற்றம் சாட்டிய நிலையில் தற்போது அமைச்சர் எ.வ.வேலு இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார்.
கண்ணாடி இழைப் பாலம்
இதுதொடர்பாகப் பேசிய அவர், "கண்ணாடிப் பாலம் ரூ.37 கோடி திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இந்தப் பாலம் கடல் பரப்பில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வப்பொழுது சிறு, சிறு பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி, பராமரிப்புப் பணியில் இருந்தபோது, சுத்தியல் தவறி கீழே விழுந்ததில் பாலத்தில் சிறு கீறல் ஏற்பட்டது. பாலத்தில் உடைப்பு என்பது ஏற்படவில்லை.
தவறான தகவல்
ஆனால் இந்த அரசைப் பிடிக்காதவர்கள் கண்ணாடிப் பாலம் உடைந்ததாகத் தவறான தகவல்களைக் கூறுகிறார்கள். செய்திகளும் தவறாக வெளியிடப்படுகிறது. கண்ணாடிப் பாலத்தில் ஒரே நேரத்தில் 650 பேர் நிற்கும் வகையில் உறுதித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இதுவரை சுமார் 17 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
அதிமுக குற்றச்சாட்டு
விபத்தால் ஏற்பட்ட கீறல் முழுமையாகச் சரி செய்யப்பட்டு பாலம் உறுதியுடன் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவதால் பூம்புகார் நிறுவனம் மூலம் மூன்று கப்பல்கள் வாங்க டெண்டர் கோரப்பட்டு கப்பல் கட்டுமானப் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது" என்றார். முன்னதாகப் பாலம் உடைந்துவிட்டதாகவும் தரமற்ற முறையில் பாலம் கட்டப்பட்டுள்ளதாகவும் அதிமுகவினர் குற்றம் சாட்டியதோடு, அதனை முன்னாள் அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கது. தனது பிரச்சாரத்தின்போதும் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்த நிலையில் தற்போது தமிழக அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications