மாணவிக்கு பாலியல் தொல்லை.. கராத்தே மாஸ்டர் குற்றவாளி என தீர்ப்பு .. இன்று தண்டனை விவரம் அறிவிப்பு!
சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கான தண்டனை விவரங்கள் இன்று சென்னை மகளிர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட உள்ளது. கராத்தே பயிற்சி பெற வந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கெபிராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், 32 பேர் அளித்த சாட்சியம் அடிப்படையில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கெபிராஜ். 41 வயதாகும் இவர், கராத்தே மாஸ்டர். கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பகுதி நேர கராத்தே பயிற்சியாளராக சில ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். அதேபோல் தற்காப்பு கலை பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி வந்திருக்கிறார். சென்னை மற்றும் புறநகரில் உள்ள தனியார் பள்ளிகளில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்திருக்கிறார்.

அந்த வகையில் தற்காப்பு பயிற்சி பெறும் மாணவிகளை போட்டிகளில் பங்கேற்க வைப்பதற்காக வெளி மாவட்டங்களுக்கு கெபிராஜ் அழைத்து செல்வது வழக்கம். அப்படி 2014ஆம் ஆண்டு தன்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களை நாமக்கல் மாவட்டத்தில் நடந்த போட்டிகளுக்கு அழைத்து சென்றிருக்கிறார். இந்த போட்டிகள் முடிவடைந்து மீண்டும் நாமக்கல்லில் இருந்து ஈரோடு ரயில் நிலையத்திற்கு காரில் வந்திருக்கின்றனர்.
அப்போது 19 வயது மாணவிக்கு கெபிராஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாலியல் தொல்லை தொடர்பாக யாரிடமும் சொல்லக் கூடாது என்று கெபிராஜ் மிரட்டல் விடுத்திருக்கிறார். இதுகுறித்து 2021ஆம் ஆண்டு அந்த மாணவி அண்ணாநகார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து கராத்தே மாஸ்டர் கெபிராஜ் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதன்பின் வழக்கின் விசாரணை சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி பத்மா முன்னிலையில் நடைபெற்றது. மொத்தமாக போலீசார் தரப்பில் 32 சாட்சிகள் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த விசாரணை முடிவடைந்த நிலையில், கெபிராஜ் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இவருக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications