விஜயதாரணி, கோபண்ணா என்ன பண்றாங்க தெரியுமா.. என்மீது மட்டும் நடவடிக்கையா.. கராத்தே தியாகராஜன் பகீர்
Recommended Video
சென்னை: விஜயதாரணி மற்றும் கோபண்ணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காமல் என்மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது சரியல்ல என்று சரமாரியாக விளாசினார், காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள கராத்தே தியாகராஜன்.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, காங்கிரசிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் கராத்தே தியாகராஜன். இதனிடையே இன்று காலை திடீரென, மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர், இதுகுறித்து கராத்தே தியாகராஜன் தனது பேட்டியில் கூறியதாவது: உள்கட்சி ஆலோசனையின் போது எனது கருத்தை நான் தெரிவித்திருந்தேன். என்னைப் போலவே நிறைய மாவட்ட செயலாளர்களும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

நடவடிக்கை
ஆனால் என்னை மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் பேசியது காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் இருந்த அபிப்பிராயத்தை மட்டுமே. எனக்கு எந்த ஒரு விளக்கமும் கேட்காமல், நோட்டீஸ் அனுப்பாமல் திடீரென நடவடிக்கை எடுத்துள்ளனர். யாரும் கட்சி விஷயம் பற்றி பேசக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிவுறுத்தினார்.

மோடியை புகழும் விஜயதாரணி
அதற்கு பிறகும், டிவி விவாதத்தில் எம்எல்ஏ விஜயதாரணி மோடியை புகழ்ந்து பேசினார். 2006ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் தயவால்தான் மைனாரிட்டியாக இருந்த திமுக தமிழகத்தில் அரசு நடத்த முடிந்தது என்று வேலுசாமி பேசினார். அவர்கள் மீது எல்லாம் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருவேளை நான் பேசியது தவறு என்றால், நான் பேசும்போது அழகிரி கண்டித்து இருக்கலாமே. அதே மேடையில் அவர் சும்மாதான் உட்கார்ந்திருந்தார்.

திமுக காரணமா
நான் எப்போதுமே, ராகுல் காந்திக்கு விசுவாசமாகவும், அன்புக்குரிய தலைவர் சிதம்பரத்துக்கும் விசுவாசமாக இருப்பேன். என் மீதான நடவடிக்கையை ராகுல் காந்திக்கு தெரிந்துதான் எடுத்தார்களா, என்று புரியவில்லை. என் மீதான நடவடிக்கைக்கு திமுக காரணமா அல்லது அழகிரியே நேரடியாக காரணமா என்பது எனக்கு தெரியவில்லை.

புத்தகம்
கோபண்ணா காங்கிரஸ் கட்சியின் சொத்தை கொள்ளை அடித்தவர். 500 சதுர அடி, இடத்தை வைத்துக்கொண்டு 2000 சதுர அடி நிலத்தை மடக்கி வைத்து உள்ளார். பெருந்தலைவர் காமராஜர் 100 ரூபாயை சட்டைப்பையில் வைத்துக் கொண்டு இறந்தார். ஆனால் அவரை வைத்து, ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வெளியிட்டு கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்தவர்தான் கோபண்ணா. இந்த மாதிரி ஆட்களை எல்லாம் காங்கிரஸில் வைத்துக்கொண்டு, என் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். நான் வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை காவல் துறையை அணுகி கோபண்ணா மீது புகார் அளிக்க உள்ளேன்.

பாஸ் விற்பனை
ராகுல் காந்தி சென்னை வந்தபோது, அதற்காக கொடுத்த பத்திரிகை பாஸ், கோபண்ணாவால் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்க ராகுல் காந்தியை கேட்டுக்கொண்டுள்ளேன். இவர் பாஸ் விற்பனை செய்ததால் ராகுல் காந்தி, பாதுகாப்பே கேள்விக் குறியானது. இவ்வாறு கராத்தே தியாகராஜன் தெரிவித்தார். இதனிடையே, இந்த குற்றச்சாட்டை கோபண்ணா மறுத்துள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications