சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங்., தமாகா, அதிமுக, தலைமறைவு, மீண்டும் காங்.. நாளை பாஜக ஜோதியில் சங்கமிக்கும் கராத்தே தியாகராஜன்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகராட்சியின் மாஜி பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன் நாளை பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாகிறார்.

1990களின் இறுதியில் சென்னை அரசியலை குறிப்பாக சென்னை மாநகராட்சியை கலக்கியவர்களில் மறைந்த வெற்றிவேல், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். காங்கிரஸ், தமாகா என பயணித்தார். 1996-ல் திமுக-தமாகா அணிக்கு ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்ததில் தூதர்களாக செயல்பட்டவர்கள் கராத்தேயும் வெற்றியும்.

2001-ல் தென் சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக பதவியில் இருந்தார் கராத்தே. அப்போது சட்டசபை தேர்தலில் கராத்தே கால் வைத்த இடம் எல்லாம் களேபரமும் கலவரமும் என்கிற நிலைதான். 2001 உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கராத்தே தியாகராஜன் துணை மேயரானார். அப்போது மேயராக இருந்தார் மு.க.ஸ்டாலின்.

துணை மேயராகிறார் கராத்தே தியாகராஜன்

ஜெ.வுடன் மோதல்- தலைமறைவு

ஜெ.வுடன் மோதல்- தலைமறைவு

2005-ல் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதலால் கராத்தே தியாகராஜன் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவானது. இதனையடுத்து சுமார் 6 மாத காலம் கராத்தே தியாகராஜன் தலைமறைவாக இருந்தார். கராத்தே தியாகராஜனை தேடி நேபாளம் வரை சென்னை போலீஸ் படையெடுத்தது என்பதெல்லாம் வரலாறு. அப்போது கராத்தே தியாகராஜனின் தாயார் மரணம் அடைந்தார். அந்த இறுதி சடங்கில் கூட கராத்தே தியாகராஜனால் பங்கேற்க முடியவில்லை.

கராத்தே தியாகராஜன் பதவி பறிபோகிறது

ஜெ.வுடன் மோதல்- தலைமறைவு

ஜெ.வுடன் மோதல்- தலைமறைவு

2005-ல் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதலால் கராத்தே தியாகராஜன் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவானது. இதனையடுத்து சுமார் 6 மாத காலம் கராத்தே தியாகராஜன் தலைமறைவாக இருந்தார். கராத்தே தியாகராஜனை தேடி நேபாளம் வரை சென்னை போலீஸ் படையெடுத்தது என்பதெல்லாம் வரலாறு. அப்போது கராத்தே தியாகராஜனின் தாயார் மரணம் அடைந்தார். அந்த இறுதி சடங்கில் கூட கராத்தே தியாகராஜனால் பங்கேற்க முடியவில்லை.

காங். கலக குரல்

காங். கலக குரல்

பின்னர் 2006 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக தமிழகம் திரும்பி காங்கிரஸில் மீண்டும் ஐக்கியமானார். காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார். ஆனால் காலந்தோறும் காங்கிரஸ் கட்சியில் கலகக் குரலின் முகமாகவே கராத்தே இருந்துவந்தார். இதனால் ஒழுங்கு நடவடிக்கைகள் கராத்தே மீது பாய்ந்தன.

சென்னை துணை மேயரானார் கராத்தே தியாகு

ரஜினிக்காக தவம்..

ரஜினிக்காக தவம்..

2019-ல் மீண்டும் காங்கிரஸில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் திசை மாறினார். அரசியலுக்கு வர காத்திருந்த நடிகர் ரஜினிகாந்தின் அறிவிக்கப்படாத ஆலோசகர் போல செயல்பட்டார்.

பாஜகவில் நாளை ஐக்கியம்

பாஜகவில் நாளை ஐக்கியம்

ஆனால் ரஜினிகாந்த் கட்சி தொடங்க மறுத்த நிலையில் பாஜக அல்லது அதிமுகதான் கராத்தே தியாகராஜனின் சாய்ஸாக இருந்தது. இந்த நிலையில் பாஜகவில் நாளை அதிகாரப்பூர்வமாக இணைகிறார் கராத்தே தியாகராஜன்.

கராத்தேவை அடிக்க பாய்ந்த திமுக கவுன்சிலர்கள்!

English summary
Chennai Former Deputy Mayor Karate Thiagarajan will join BJP tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X