நிரம்பிய நீர் குறையாமல் இருக்கும் கபினி, கேஆர்எஸ்! மேட்டூர் அணையில் 50 % கூட காவிரி இல்லையே!
சென்னை: தமிழகம், கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்றைய தினம் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்திருக்கிறதா இல்லை அதே நிலையிலேயே இருக்கிறதா என்பதை பார்ப்போம்.
டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் அரிசி உற்பத்திக்கு வித்திடுகின்றன. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை அழைக்கப்படுகிறது. இங்கு காவிரி நீர் வந்தால் விவசாயம் செழிப்பாக இருக்கும். ஆனால் தமிழகத்திற்கு காவிரி தர வேண்டும் என உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம், என யார் தீர்ப்பு வழங்கினாலும் அதை கர்நாடகா மதிப்பதே இல்லை.

எவ்வளவு மழை பெய்தாலும் பஞ்ச பாட்டு பாடி தண்ணீரை தருவதில்லை. ஆயினும் வருண பகவான் கருணையால் ஓரளவுக்கு மழை பெய்து மக்கள் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள். எனினும் நம் உரிமை எப்போது சரிவர, முறையாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இன்றைய நிலவரப்படி (21.5.2024) கிருஷ்ணராஜ சாகர் அணை 92.97 அடி நீரும், கபினியில் 50.38 அடி நீரும் , ஹாரங்கியில் 89.53 அடி நீரும் ஹேமாவதியில் 69.07 நீரும் இருக்கிறது.
இதே நேற்றைய நிலவரப்படி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் 92.97 அடி நீரும், கபினியில் 50.38 அடி நீரும் ஹரங்கியில் 89.53 அடி நீரும் ஹேமாவதி அணையில் 69.07 அடி நீரும் இருப்பு உள்ளது. அதாவது நேற்றைய நிலவரத்தில் எந்த மாற்றமும் இல்லை.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி மேட்டூரில் தற்போது 42.7 அடி நீர் இருப்பு உள்ளது. அது போல் பவானி சாகரில் 49.5 அடியும் அமராவதியில் 27.1 அடியும் வைகையில் 39.14 அடியும் மணிமுத்தாறில் 95.25 அடியும் பேச்சிபாறையில் 27.7 அடியும் திருமூர்த்தியில் 38.63 அடியும், சாத்தனூரில் 117.15 அடியும் நீர் இருப்பு உள்ளது.
அதாவது தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி மேட்டூரில் தற்போது 42.7 அடி நீர் இருப்பு உள்ளது. அது போல் பவானி சாகரில் 49.5 அடியும் அமராவதுயில் 27.1 அடியும் வைகையில் 114.15 அடியும் மணிமுத்தாறில் 67.6 அடியும் பேச்சிபாறையில் 27.7 அடியும் திருமூர்த்தியில் 38.63 அடியும், சாத்தனூரில் 117.15 அடியும் நீர் இருப்பு உள்ளது.
அதாவது கர்நாடகாவில் உள்ள அனைத்து முக்கிய அணைகளிலும் இன்னும் குறையவே இல்லை. ஆனால் தமிழகத்தில் ஒரு சில அணைகளில் நீர் இருப்பு வெகுவாகவே குறைந்துள்ளது. உதாரணமாக வைகையில் நேற்றைய தினம் 114.15 அடி நீர் இருந்த நிலையில் இன்று 39.14 அடிநீர்தான் இருக்கிறது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications