பஜ்ரங்தள் தடை.. கடும் இந்துத்துவா எதிர்ப்புதான் இனிமேல் கை கொடுக்கும்- கர்நாடகாவில் பாடம் கற்ற காங்.
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பஜ்ரங் தள் அமைப்புக்கு தடை போன்ற கடுமையான இந்துத்துவா எதிர்ப்பு நிலைப்பாடுகள்தான் சிறுபான்மையினர் வாக்குகளை மொத்தமாக கிடைக்க வைத்தது என்கிற பாடத்தை காங்கிரஸ் கற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் பெரும்பாலும் தொங்கு சட்டசபைக்கான ஆரூடத்தை கூறின. ஒன்றிரண்டு கருத்து கணிப்புகளே பாஜக அல்லது காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பலத்தைப் பெறும் என கணித்தன.

காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன; ஆனால் பஜ்ரங் தள் அமைப்புக்கு தடை போன்ற வாக்குறுதிகள் காங்கிரஸுக்க்கு பின்னடைவை தரக் கூடும்; பிரதமர் மோடியின் பதிலடி பிரசாரமான ஜெய் பஜ்ரங் பலி போன்றவை காங்கிரஸ் வெற்றிக்கு சேதாரம் ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டது.
ஆனால் தேர்தல் முடிவுகள் அப்படியே காங்கிரஸுக்கு சாதகமாகின. பாஜகவைப் பொறுத்தவரையில் அதனது வாக்கு வங்கியை சிந்தாமல் சிதறாமல் ஒரு விழுக்காடு கூட குறையாமல் 36% என்பதை தக்க வைத்தது. காங்கிரஸ் கட்சியோ கூடுதலாக 5% வாக்குகளைப் பெற்றது. இது மஜதவின் வாக்கு வங்கிதான். மஜதவுக்கு ஒக்கலிகா கவுடா, பழைய மைசூர் பிராந்திய முஸ்லிம்கள் வாக்குகள் கணிசமாக கிடைத்து வந்தது. இந்த தேர்தலில் இவை அப்படியே காங்கிரஸுக்கு மடைமாறியதால் தேர்தல் களம் அக்கட்சிக்கு சாதகமாகிவிட்டது.
இது தொடர்பாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், காங்கிரஸ் கட்சி கர்நாடகா தேர்தலில் இருந்து பல பாடங்களை கற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. பாஜக, பொதுவாக இந்துத்துவா வாக்குகளை ஒருங்கிணைக்க கடுமையான இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பது வழக்கம். இதற்கு அஞ்சி, காங்கிரஸும் இந்துத்துவா ஆதரவு கொள்கைகளை ஆதரிப்பது போல பேசுவது அபத்தமாகும். கர்நாட்கா தேர்தல் அறிக்கையில் இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தள் இயக்கத்துக்கு தடை விதிப்போம் என ஆணித்தரமாக அறிவித்தது காங்கிரஸ். இதனை பாஜக தமக்கு சாதகமாக பயன்படுத்தியது உண்மைதான். ஆனால் இன்னொரு பக்கம், காங்கிரஸின் இந்த கடுமையான இந்துத்துவா எதிர்ப்பு நிலைப்பாடு இஸ்லாமிய வாக்குகளை காங்கிரஸ் மீது நம்பிக்கை கொள்ள வைத்தது. காங்கிரஸ் கட்சியின் பக்கம் வாக்குகள் மடை மாற காரணமாகவும் இருந்தது.
அதேபோல முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீடு ரத்து விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்கள் ஆவேசமாக நியாயப்படுத்தினர். ஆனால் காங்கிரஸ் கட்சியோ திட்டவட்டமாக 4% முஸ்லிம் இடஒதுக்கீட்டை மீளக் கொண்டு வருவோம் என்றது. இதுவும் காங்கிரஸ் பக்கம் மொத்தமாக முஸ்லிம் வாக்குகள் திரும்புவதற்கு காரணமாகிவிட்டது. ஆகையால் காங்கிரஸ் கட்சியானது பாஜகவுக்கு அஞ்சி சாஃப்ட் இந்துத்துவா அல்லது மென்மை இந்துத்துவா கொள்கைகளை எடுப்பதை கைவிட்டு திராவிடம் பாணியில் கடும் இந்துத்துவா எதிர்ப்பு நிலைப்பாட்டை பேச வேண்டிய பாடம் கர்நாடகாவில் கிடைத்திருக்கிறது என்கின்றனர்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications