லாக்டவுன் தளர்வு: கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு மீண்டும் பேருந்து சேவை.. இன்று முதல் இயங்கும்!
சென்னை: கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு இன்று (ஆகஸ்ட் 23) முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் வேகமாக குறைந்து வருகிறது. தினசரி கேஸ்களின் எண்ணிக்கை தினமும் குறைந்த வண்ணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று 1630 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 23 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 34,709 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

இதையடுத்து தமிழ்நாட்டில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா கேஸ்கள் சரிந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு பல்வேறு முக்கியமான தளர்வுகளுடன் செப்டம்பர் 6ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.
முக்கிய தளர்வாக தமிழ்நாட்டில் இருந்து ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகாவிற்கு பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. கொரோனா காரணமாக இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கர்நாடகா, ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கேஸ்கள் குறைந்துவிட்டது. இதனால் அந்த மாநிலங்களுக்கு மீண்டும் செப்டம்பர் 1 முதல் பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டிற்கு பேருந்து சேவையை தொடங்க கர்நாடகாவும் முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 250 பேருந்துகள் இயக்கப்படும் அம்மாநில போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பல்வேறு வழிகளில் இயக்கப்படும் பேருந்துகள் இன்று காலையில் இருந்து இயக்கப்படும். கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை கணிசமான குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பேருந்துகள் இயக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி தமிழ்நாடு கர்நாடகா இடையே பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின் நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. முக்கியமாக தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவிற்கு பயணிக்க ஆர்டிபிசிஆர் சோதனை முடிவுகள் கேட்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கேஸ்கள் குறைந்த காரணத்தால் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications