Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கற்பூரவள்ளி வாழைப்பழத்தில் ஒளிந்திருக்கும் ரகசிய சத்து.. உடல் எடைய குறைய சூப்பர் ஃபுட்.. அதிசய பழம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முதலில் தவிர்க்கும் உணவுப் பட்டியலில் வாழைப்பழம் முதலிடத்தில் இருக்கும்.. வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்ற பொதுவான கருத்து மக்களிடையே நிலவுகிறது.. ஆனால், வாழைப்பழங்களில் உள்ள சத்துக்களையும், குறிப்பாக கற்பூரவள்ளி போன்ற குறிப்பிட்ட ரகங்கள் உடல் எடையை குறைக்க எப்படி உதவுகின்றன என்பதையும் உணர்ந்தால் உங்கள் கருத்து நிச்சயம் மாறும்.

பொதுவாக ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் சுமார் 105 கலோரிகள் மற்றும் 27 கிராம் மாவுச்சத்து உள்ளது.. இந்த வாழையை பொறுத்தவரை கொழுப்புச் சத்து என்பது சுத்தமாக கிடையாது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.. மாறாக, உடலுக்குதேவையான நார்ச்சத்து மற்றும் புரதம் இதில் தாராளமாக நிறைந்துள்ளன..

எலும்புகள், தசைகள்

வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சத்து மனித எலும்புகளுக்கும் தசைகளுக்கும் அபாரமான வலிமையைத் தருகிறது.. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவையான பொட்டாசியத்தில் 11 சதவீதத்தை ஒரே ஒரு வாழைப்பழம் வழங்கிவிடுகிறது..

குறிப்பாக பச்சை வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டால், அதில் கொழுப்பை எரிக்கக்கூடிய தன்மை அதிகம் உள்ளது.. இதைச் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால், அந்த நாள் முழுவதும் வயிறு நிறைந்த உணர்வு இருக்கும்.. இதனால் தேவையில்லாத நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவது தவிர்க்கப்பட்டு, உடல் எடை தானாகவே குறையத் தொடங்குகிறது.. அதேநேரம், இதில் மாவுச்சத்து அதிகம் என்பதால், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும்போதுதான் அது உடலில் சேமிக்கப்பட்டு எடையை கூட்டுகிறது..

கற்பூரவாழை வரப்பிரசாதம்

|இதைத் தவிர்க்க ஒரு எளிய வழிமுறை உள்ளது.. வாழைப்பழத்தை ஆரஞ்சு அல்லது திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களோடு சேர்த்துச் சாப்பிடும்போது, உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்க முடியும்.. இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது கற்பூரவள்ளி ரகம்..

எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. இதில் உள்ள செரட்டோனின் மற்றும் நார் எபினெஃப்ரின் ஆகிய சத்துக்கள் ஜீரண சக்தியைத் தூண்டி, வளர்சிதை மாற்றத்தைச் சீராக்குகின்றன.. மேலு இதில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்கள் அதிக அளவில் இருப்பதால் எலும்புகள் இரும்பு போல உறுதி பெறுகின்றன..

காலை உணவைத் தவிர்க்கும் பழக்கம் உள்ளவர்கள், ஒரே ஒரு கற்பூரவள்ளி பழத்தைச் சாப்பிடுவதன் மூலம் அன்றைய நாளுக்குத் தேவையான முழு ஆற்றலையும் பெற முடியும்.. இது உடல் சோர்வை நீக்குவதுடன் மன அழுத்தத்தையும் குறைக்கிறது..

கற்பூரவள்ளி, எலுமிச்சை, கொய்யாப்பழம்

உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் கற்பூரவள்ளியுடன் கொய்யாப்பழம் அல்லது எலுமிச்சையையும் சேர்த்துக் கொள்ளலாம்.. கொய்யாப்பழத்தில் கலோரிகள் குறைவு என்பதால், அதுவும் வாழைக்கு இணையான ஒரு மருந்தாகச் செயல்படுகிறது..

குறிப்பாக, வாழைப்பழத்தில் உள்ள'ரெசிஸ்டண்ட் ஸ்டார்ச் (Resistant Starch) எனும் ஒருவகை மாவுச்சத்து, செரிமானத்தை மெதுவாக்கி ரத்தத்தில் சர்க்கரை அளவு சட்டென்று உயராமலும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.. எனவே, சரியான முறையில் திட்டமிட்டு கற்பூரவள்ளி வாழைப்பழத்தை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைப்பது மிகவும் எளிதான காரியமாகிவிடும்..!!

கற்பூரவள்ளி

இதில், மருத்துவ குணம் கொண்ட கற்பூரவள்ளி வாழைப்பழம் கூடுதல் பலன் தரக்கூடியது. இதற்கு தேன் வாழைப்பழம் என்றும் இன்னொரு பெயர் உண்டு.. பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். ஆனால், சத்துக்களும், சுவையும் அபரிமிதமாக இருக்கும்..

சாம்பல் கலந்த பச்சை கலரிலும், மஞ்சள் நிறத்திலும் இந்த பழங்கள் காணப்படும்.. இதன் தோல், கருத்துவிட்ட பின்பும், இந்த பழம் சாப்பிடக்கூடியது. ருசி அப்போதும் மாறாது.. அதுபோல, இந்த பழத்தின் நடுவில் விதைகள் சற்று அதிகமாகவே காணப்படும். பழத்துடன் சேர்த்து, இந்த விதையை மெல்லும்போது, தனிருசி கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+