கேப்டனாக இருந்து சிப்பாயாக மாறி.. சின்னாபின்னமான விஜயகாந்த்.. கார்த்தி சிதம்பரம் திடீர் தாக்கு
விஜயகாந்த்தை கடுமையாக விமர்சித்து ட்வீட் போட்டிருக்கிறார் கார்த்தி சிதம்பரம்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கும், காங்கிரசின் கார்த்தி சிதம்பரத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? ஆனாலும் விஜயகாந்த்தை சரமாரியாக விமர்சித்துள்ளார் கார்த்திக்!
இவ்வளவு நாள் காங்கிரஸ் தரப்பில் குறிப்பாக ப.சிதம்பரம் தரப்பில் தேமுதிகவை பற்றி அவ்வளவாக பேசியதே கிடையாது. கூட்டணி தொடர்பாக திமுக தலைமை சென்று பேசியது, பிறகு அதில் தோல்வி அடைந்தது... விஷயம் முடிந்தது.. அவ்வளவுதான்!

ஆனால் இன்று அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிகவை சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது சம்பந்தமான ஒரு ட்வீட்டில், "கேப்டனாக இருந்து... சிப்பாயாய் மாறி... சிப்பந்தியாய் மாறி... சின்னாபின்னமானவர் தான்.. நம்ம விஜயகாந்த்" கார்த்தி சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
எந்த நோக்கத்தில் கார்த்தி இதை பதிவிட்டார் என்று தெரியவில்லை. ஒருவேளை கூட்டணிக்குள் தேமுதிக வராமல் போய்விட்டது என்ற விரக்தி, ஆத்திரத்தில் இவ்வாறு கருத்து சொல்லி இருப்பாரா அல்லது தேமுதிகவின் வளர்ச்சி அன்றிலிருந்து இன்றுவரை இப்படி ஆகிவிட்டது என்று சொல்கிறாரோ என்றும் புரியவில்லை.
கேப்டனாக இருந்து
— Karti P Chidambaram (@KartiPC) March 11, 2019
சிப்பாயாய் மாறி
சிப்பந்தியாய் மாறி
சின்னாபின்னமானவர் தான்
நம்ம விஜயகாந்த்.. https://t.co/qc2ZJrFN6P
ஆனால் "சிபிஐ வழக்கு நிலுவையில் உள்ள ஒருவர் இப்படி பேசலாமா" என்றும், "சிங்கத்துக்கு (#கேப்டன்) கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருந்தால் எலி அங்கும் இங்கும் ஓடி விளையாடுமாம்" என்றும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.
ஆனால் கார்த்தி சிதம்பரத்துக்கிட்ட இருந்தெல்லாம் இப்படி வாங்கி கட்டிக்கணும்னு விஜயகாந்த்துக்கு தலையெழுத்துதான் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications