103 இடங்களில் நடந்த கருணாநிதி நூற்றாண்டு மருத்துவ முகாம்! 1.88 லட்சம் பேர் பயன்! -மா.சுப்ரமணியன்
சென்னை: கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி 103 இடங்களில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 1.88 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமனியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள தகவல் வருமாறு;
''கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 103 இடங்களில் கலைஞர் நூற்றாண்டு மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் 24-6-2023 அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் பதிவு செய்து பரிசோதித்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1,88,885 பேர் ஆகும்.
இம்மருத்துவ முகாமில் சித்தா மற்றும் இந்திய மருத்துவத்திற்காக பதிவு செய்து பரிசோதனை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 35,138 பேர் ஆகும். நேற்று நடைபெற்ற மருத்துவ முகாமில் பல்வேறு மருத்துவ துறைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் பரிசோதித்து நோய் கண்டறியப்பட்டவர்கள் விவரம் வருமாறு:

- நேற்று நடைபெற்ற மருத்துவ முகாமில் விநியோகிக்கப்பட்ட மருந்துகளின் செலவு தொகை ரூ.42,31,404.
- நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் எனும் இரண்டு நோய்களுக்காக பரிசோதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை - 1,15,048
- நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்று பதிவு செய்து பரிசோதித்து கொண்டவர்கள் - 14,471
- நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்று பரிசோதித்ததில் கண்டறியப்பட்டவர்கள் - 4,056
- இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் என்று பதிவு செய்து பரிசோதித்துகொண்டவர்கள் - 19,217
- இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் என்று பரிசோதித்ததில் கண்டறியப்பட்டவர்கள் - 5,576
- நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தநோய் உள்ளவர்கள் என்று பதிவு செய்து பரிசோதித்து கொண்டவர்கள் - 8,333
- நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய் என்று இரண்டும் உள்ளவர்கள் என்று பரிசோதித்ததில் கண்டறியப்பட்டவர்கள் - 2,005
- கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டவர்கள் எண்ணிக்கை - 7,849
- கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதித்ததில் அறிகுறி உள்ளவர்கள் - 762
- மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டவர்கள் - 8,712
- மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையில் அறிகுறி உள்ளவர்கள் - 1,176
- இரத்த சோகை கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டவர்கள் - 44,165
- பரிசோதனையில் இரத்த சோகை கண்டறியப்பட்டவர்கள் - 5,492
- சிறுநீரக செயல்பாட்டினை கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டவர்கள் - 28,553
- பரிசோதனையில் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் என்று கண்டறியப்பட்டவர்கள் - 785
- இரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்து கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டவர்கள் - 28,658
- இரத்த பரிசோதனையில் இரத்த கொழுப்பு அதிகம் கண்டறியப்பட்டவர்கள் - 1,299
- காசநோய் பரிசோதனை மேற்கொண்டவர்கள் - 12,817
- சளி பரிசோதனைக்கான மாதிரிகள் எண்ணிக்கை - 4,366
- பரிசோதனையில் மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் - 289
- தொழுநோய் பரிசோதனை மேற்கொண்டவர்கள் - 12,591
- தொழுநோய் பரிசோதனை மேற்கொண்டதில் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் - 133
- தொழுநோய் பரிசோதனையில் நோய் உறுதி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் - 14
- கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டவர்கள் - 936
- பல் பரிசோதனை மேற்கொண்டவர்கள் - 13,685
- பல் பரிசோதனை முடிந்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் - 1,565
- இ.சி.ஜி. பரிசோதனை மேற்கொண்டவர்கள் - 14,894
- இ.சி.ஜி. பரிசோதனையில் பாதிப்பு கண்டறியப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டவர்கள் - 1,238
- எகோ பரிசோதனை மேற்கொண்டவர்கள் - 7,020
- எகோ பரிசோதனையில் பாதிப்பு கண்டறிய்ப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டவர்கள் - 715
- முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தவர்கள் - 13,125
- தமிழ்நாடு பார்வை இழப்பு தடுப்புத் திட்டத்தின் மூலம் பரிசோதிக்கப்பட்டு கண் கண்ணாடி பெறப்பட்டவர்களின் எண்ணிக்கை - 3,852
என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ முகாமின் பயனாளிகளின் விவரத்தை தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications