இப்படியோர் நினைவிடம் வாய்க்குமென்றால் எத்தனை முறையும் இறக்கலாம்.. வைரமுத்து
சென்னை: இப்படியோர் நினைவிடம் வாய்க்குமென்றால் எத்தனை முறையும் இறக்கலாம் என்று மெரீனாவில் கருணாநிதி நினைவிடம் குறித்து வைரமுத்து கூறியுள்ளார். கலைஞர் கண்டிருந்தால் கவிதை பாடியிருப்பார் என்றும் வைரமுத்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி, கடந்த 2018 ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். அவரது உடல் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். கடந்த 2021ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் சட்டசபை விதி எண் 110ன் கீழ் மெரினா கடற்கரையில் அண்ணாதுரை நினைவிட வளாகத்தில் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.
தமிழக அரசு சார்பில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நவீன விளக்கப்படங்களுடன் இந்த நினைவிடம் அமைக்கப்பட இருக்கிறது. இதன் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தற்போது முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. கருணாநிதியின் சாதனைகளை கூறும் நினைவிட முகப்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்தன் அடையாளமாக உதயசூரியன் போன்று முகப்பில் கலைஞர் நினைவிடத்தில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளும் நடைப்பெற்று முடிந்துள்ள நிலையில் இன்றைய தினம் நினைவிடம் திறக்கப்பட உள்ளது.
திமுக தொண்டர்களுக்கு பொக்கிஷமாகவும் பல்வேறு சிறப்புகள் கொண்டதாகவும் இருக்கிறது கருணாநிதி நினைவிடம். அந்த நினைவிடத்திற்கு சென்றிருந்த கவிஞர் வைரமுத்து தனது அனுபவங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கலைஞர் நினைவிடம்
கண்டு சிலிர்த்தேன்
கலைஞரின்
கையைப் பிடித்துக்கொண்டே
கலைஞர் நினைவிடம்
சுற்றிவந்த உணர்வு
இது தந்தைக்குத்
தனயன் எழுப்பிய மண்டபமல்ல
தலைவனுக்குத்
தொண்டன் கட்டிய தாஜ்மஹால்
"இப்படியோர் நினைவிடம்
வாய்க்குமென்றால்
எத்தனை முறையும் இறக்கலாம்"
கலைஞர் கண்டிருந்தால்
கவிதை பாடியிருப்பார்
உருவமாய் ஒலியாய்
புதைத்த இடத்தில்
கலைஞர் உயிரோடிருக்கிறார்
உலகத் தரம்
நன்றி தளபதி
என்று பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications