எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டுக… பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி கடிதம்
Recommended Video

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆரின் பெயரை வைத்திருப்பது போல எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆரின் பெயர் சூட்டப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் இந்த கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சென்னை வண்டலூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில், சென்னையின் மற்றுமோர் அடையாளமான எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முன்னாள் திமுக தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் பெயரை சூட்டவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுகவில் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனிக்கட்சி தொடங்க மு.க. அழகிரி தயாரானார். ஆனால் அந்த முயற்சியும் கைகூடவில்லை என கூறப்படுகிறது . நேற்று விருதுநகரில் திமுக தென் மண்டல மாநாடு நடைபெற்ற அதே நேரத்தில், மு .க. அழகிரி பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருப்பது மீண்டும் அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications