எம்ஜிஆருக்கு போட்டியாக மு.க.முத்து.. பெரியப்பாவின் பெருந்தன்மை! கலைஞரின் வாரிசு.. கையேந்திய சோகம்!
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனான மு க முத்து சென்னையில் காலமானார். எம்ஜிஆருக்கு போட்டியாக ஒரு காலத்தில் சினிமா துறையில் நுழைந்த அவர் குடிப்பழக்கத்தால் வீழ்ந்து குடும்பத்தால் ஒதுக்கப்பட்டு பரிதாபமான நிலையில் வாழ்ந்து வந்தார். எம்ஜிஆர்-க்கு போட்டியாக வந்தாலும், முக முத்துவின் முதல் படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்ததே எம்ஜிஆர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எம்ஜிஆரை மு.க.முத்து பெரியப்பா என்று தான் அழைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக முன்னாள் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி-பத்மாவதி தம்பதியின் மூத்த மகன் மு.க.முத்து. நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகங்கள் கொண்டவர். பிரபல பாடகர் ஜெயராமனின் சகோதரி தான் பத்மாவதி என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக தலைவர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதி திமுகவின் தலைவராகவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகவும் பொறுப்பேற்றார். அப்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தோடு இருந்தவர் எம்ஜிஆர். திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற ஒரு அணியாகவே எம்ஜிஆர் ரசிகர் மன்றம் இருந்தது.

இந்நிலையில், எம்ஜிஆருக்கு போட்டியாக சினிமாவிலும் அரசியலுக்கும் வந்தவர்தான் முக முத்து. கலைஞர் கருணாநிதி தான் தன்னை சினிமா துறையில் நுழைய வைத்தார் என மு.க. அந்த வகையில் பிள்ளையோ பிள்ளை படத்தில் தான் முதன் முதலாக மு.க.முத்து நடித்த அந்த படத்தை அடித்து துவக்கி வைத்ததே எம்ஜிஆர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு அணையா விளக்கு, பூக்காரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக முத்து நடித்ததை போலவே குரல், அவரது நடை, உடை, பாவனை என அனைத்தையும் மு.க முத்து காப்பி அடித்ததாக சொல்லப்பட்டது.
பின்பு ரசிகர் மன்றமும் திமுகவின் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. அதற்குப் பிறகு எம்ஜிஆர் திமுகவை விட்டு விலகி தனி கட்சி ஆரம்பித்தது வேறு கதை. இந்த நிலையில் குடிப்பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து குடும்பத்தினர் ஒதுக்க திருவாரூரில் வசித்து வந்தவர். ஒரு சாதாரண நபரை போலவே வாழ்ந்து வந்தார். மிகவும் ஏழ்மையான நிலையில் சாதாரண வீட்டில் அவர் வசித்து வந்ததாக சொல்லப்பட்டது.
கலைஞரின் அரசியல் வாரிசு, கலை வாரிசாகவே பார்க்கப்பட்ட மு.க.முத்து தான் நினைத்த உயரத்தை தொடவே முடியவில்லை. அதற்கு அவரது குடிப்பழக்கம் தான் காரணம் என சொல்லப்படுகிறது. எம்ஜிஆரை பெரியப்பா என்று தான் அழைப்பார் மு.க.முத்து. கலைஞனும் எம்ஜிஆர் பிரிந்த பிறகு 'அரசியல் சனியன்' பெரியப்பாவையும் அப்பாவையும் பிரித்து விட்டது என பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நலக் குறைவால் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வந்தவர் இன்று உயிரிழந்தார். இதை அடுத்து திமுகவினரும் திரை பிரபலங்களும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு திறமைகள் இருந்தாலும், அந்த திறமைக்கான உயரத்தை அடையாமலேயே போய் விட்டவர் மு.க.முத்து என கூறுகின்றனர் திமுகவினர்.
ஒருமுறை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் மு.க முத்துவை பேட்டி காண சென்றபோது திருவாரூரில் இருந்தாராம். அப்போது தனது திரை வாழ்வு குறித்தும், அரசியல் வாழ்வு குறித்தும் மனம் திறந்து பேசியவர் எம்ஜிஆரை பெரியப்பா என்று குறிப்பிட்டதாக பதிவு செய்திருக்கிறார் அந்த பத்திரிகையாளர். அது மட்டுமல்லாமல் பேட்டி முடிந்து கிளம்பியதும் தன்னிடம் மு.க.முத்து பணம் கேட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், தமிழ்நாடு முதல்வரின் மகனா இப்படி என தான் வேதனை அடைந்ததாகவும், அந்த பத்திரிகையாளர் குறிப்பிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் அந்த பேட்டி இன்று வரை வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications