Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

56 ஆண்டுக்கு பின் புது வரலாறு- கருணாநிதியின் ராஜமன்னார் குழு போல ஸ்டாலின் அமைத்த குரியன் ஜோசப் குழு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 1969-ம் ஆண்டு மத்திய- மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய்வதற்காக அப்போதைய முதல்வர் கருணாநிதி, நீதிபதி ராஜமன்னார் தலைமையிலான குழுவை அமைத்தார். தற்போது கருணாநிதியின் மகனும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், 56 ஆண்டுகளுக்கு பின்னர் தந்தையின் வழியில் மத்திய- மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய்வதற்காக நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை அமைத்து சரித்திரம் படைத்துள்ளார்.

autonomy tamilnadu dmk stalin

தமிழ்நாடு முதல்வராக இருந்த அண்ணா மறைந்த பின்னர் 1969-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றார் கருணாநிதி. தமிழக முதல்வரான பின்னர் முதல் முறையாக டெல்லி சென்ற கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்த போது, பேரறினர் அண்ணாவின் மத்தியில் கூட்டாட்சி- மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை நிறைவேற்ற ஒரு குழு அமைக்க பரிசீலனை செய்வதாக அறிவித்தார்.

ராஜமன்னார் குழு

மேலும் தமிழ்நாடு சட்டசபையிலும் மாநில சுயாட்சி குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என அறிவித்தார் கருணாநிதி. பின்னர் அதே 1969-ம் ஆண்டு ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜமன்னார் குழுவை கருணாநிதி அமைத்தார். முன்னாள் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையிலதான் இந்த குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் அரசியல் துறை வல்லுநர்களான முன்னாள் சென்னை பல்கலைகழக துணைவேந்தர் ஏ. லட்சுமணசாமி முதலியார், நீதிபதி சந்திரா ரெட்டி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

1969-ம் ஆண்டு அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழுவானது 2 ஆண்டுகள் பல்வேறு ஆய்வுகளை நடத்திய 1971-ம் ஆண்டு தமது அறிக்கையைத் தாக்கல் செய்தது. இதுதான் மாநில சுயாட்சி சரித்திரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ராஜமன்னார் குழு பரிந்துரைகள்.

ராஜமன்னார் குழு பரிந்துரைகள்

இந்த ராஜமன்னார் குழு அளித்த பரிந்துரைகளில் சில:

  • இந்திய அரசியல் சாசனத்தின் ஆளுநரின் விருப்பப்படி மாநில அரசு நிர்வாகம் செயல்பட வேண்டும் என்பதை மாற்ற வேண்டும்
  • இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி என்கிற IAS- IPS உள்ளிட்ட அனைத்திந்திய பணிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்
  • மத்திய மற்றும் பொதுப் பட்டியலில் உள்ள முக்கிய அதிகாரங்கள், மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
  • மாநில அரசுகளைக் கலைத்து இந்திய ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் சாசனத்தின் 356, 357, 365 பிரிவுகளை நீக்க வேண்டும்
  • மாநிலங்களுக்கு இடையேயான குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்டவை ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள்.

தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம்

இந்த ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 1974-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி தமிழ்நாடு சட்டசபையில், மாநில சுயாட்சி தீர்மானத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு 161 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர். இதனால் தமிழ்நாடு சட்டசபையில் முதல் முறையாக மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டசபையில் 1974-ல் மாநில சுயாட்சி தீர்மானம் மீது மொத்தம் 4 நாட்கள் விவாதம் நடைபெற்றன. இறுதியாக 1974-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந் தேதி இந்த தீர்மானம் நிறைவேறியது.

இதனைத் தொடர்ந்து ராஜமன்னார் குழு பரிந்துரை அடிப்படையில் 1990களில் மாநிலங்களுக்கு இடையேயான குழுவும் அமைக்கப்பட்டது. இன்றைக்கும் மாநில சுயாட்சி குறித்த விவாதங்கள் நடைபெறுகின்றன.

ராஜமன்னார் குழு போல நீதிபதி குரியன் ஜோசப் குழு- ஸ்டாலின்

இந்த பின்னணியில் தமிழ்நாடு சட்டசபையில் 56 ஆண்டுகளுக்குப் பின்னர், கருணாநிதி ராஜமன்னார் குழுவை நியமித்ததைப் போல தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், நீதிபதி குரியன் ஜோசப் குழுவை அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் இதனை அறிவித்தார். இந்த குழுவில் அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் நாகநாதன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு தமது அறிக்கையை ஜனவரி மாதத்தில் தாக்கல் செய்யும்.

திமுகவும் மாநில சுயாட்சியும் வரலாற்று பின்னணி என்ன?

- 1962 ஆம் ஆண்டில் இந்தியா- சீனா யுத்தத்தின் போது தனி திராவிட நாடு கோரிக்கையை திமுக கை விட்டது.

- தனி திராவிட நாடு கோரிக்கையை கைவிட்ட திமுக, 1967 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறியதாவது: ஒருமைப்பாடு என்பதை நடைமுறைக்கு கொண்டு வரும்போது அது ஒரு பகுதியினர், பிற பகுதியினர் மீது ஆதிக்கம் செலுத்துவதாக ஆகிவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பை திமுக மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளது.

மாநில உரிமைகள் நசுக்கப்படாமல் பாதுகாத்திடவும், பொருளாதார வளம் ஒரு சீராக எல்லா மாநிலங்களுக்கும் அமைவதற்கான திட்டம் மேற்கொள்ளப்படவும், திமுக கழகம் பொறுப்புடன் பணியாற்ற உறுதி கொண்டிருக்கிறது.

மாநில உரிமைகளை பாதுகாத்திடும் முறையில் குறிப்பிடப்படாத எஞ்சிய அதிகாரங்கள் மத்திய சர்க்கார் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முறையை மாற்றி அவை மாநிலங்களுக்கு தரப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

- 1967-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணா முதல்வரானார். தமிழ்நாடு சட்டசபையில் 1967-68 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையே உள்ள தொடர்புகள் பற்றிய மறு சிந்தனை தேவை என வலியுறுத்தப்பட்டது.

- பேரறிஞர் அண்ணா மறைவுக்கு தமிழ்நாடு முதல்வரானார் கருணாநிதி. 1971 ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில், இந்திய அரசியல் முறை கூட்டாட்சி முறை என வர்ணிக்கப்பட்டாலும் அந்த தராசு, மத்திய அரசு பக்கம் அதிகபட்சம் சாய்ந்து இருப்பதால் அதிகாரத்துறையில் - நிதித்துறையில்- மாநிலங்கள் செயல்பட முடியாமல் தடைகள் இருப்பதால் அனைவரும் இந்தியா வலுப்பெற்றதாக இருக்க வேண்டும் என்ற லட்சியத்திற்கு ஊறு தேடாமல் எந்தெந்த துறைகளில் வலுவான இந்தியா இயங்குவதற்கு மத்திய அரசு செயல்பட வேண்டுமோ அந்த அதிகாரங்களை மட்டும் மத்திய அரசிடம் கொடுத்துவிட்டு இதர அதிகாரங்கள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் வகையில் அரசியல் சட்டத்தை திருத்தி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கருதுகிறோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

- 1972-ம் ஆண்டு மே மாதம் டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, நம்மைப் போன்ற பெரிய நாட்டின் தற்கால பொருளாதாரச் சிக்கல்களை சமாளிப்பதுகளில் அதிகாரங்கள் பரவலாக இருப்பது அத்தியாவசியமாகிறத. நாங்கள் எழுப்பியுள்ள மாநில சுயாட்சி கோரிக்கை நியாயத்தினை இந்த கோணத்தில் இருந்து காண வேண்டும. நாட்டின் வளங்களை இன்னும் திறமையாக நிர்வகிப்பதற்கான வேண்டுகோளாகவும் நாட்டின் ஆதாரமான காரியங்களில் மத்திய அரசு வலுடன் இயங்குவதற்கு சாதாரணமாகவும் மிக தரப்படவும் மிக விரைவிலும் மக்களின் குறைந்த பட்சத்தில் கிடைப்பதற்கான வழிவகை அமைய மாநில சுயாட்சி கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். இதன் பின்னரே ராஜமன்னார் குழு அமைக்கப்பட்டு அந்த பரிந்துரைகளை நிறைவேற்ற 1974-ம் ஆண்டு மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில சுயாட்சிக்கு அமைக்கப்பட்ட குழுக்கள் எவை?

ராஜமன்னார் குழு, சர்க்காரியா ஆணையம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+