ஸ்டாலின் தலைமையில் கருணாநிதி நுற்றாண்டு நினைவு நாணய வெளியிட்ட ராஜ்நாத் சிங்.. அண்ணாமலை பங்கேற்பு
சென்னை: கருணாநிதி நுற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது. நூறு ரூபாய் நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில், அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் இந்த விழா நடந்தது. விழாவில் மத்திய இணையமைச்சர் எல் முருகன், திமுக எம்பிக்கள், கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி நூறு ரூபாய் நினைவு நாணயம் வெளியிட வேண்டும் என்ற மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. மத்திய நிதியமைச்சகத்திடம் கடந்த ஆண்டு இதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்த நாணையத்தை கருணாநிதியின் பிறந்த நாளான கடந்த ஜுன் 3-ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், சில காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது. நாணயம் வெளியிடுவதற்கான நடைமுறைகள் முடிவடையாதது உள்ளிட்டவைகள் காரணமாக ஜூன் 3 ஆம் தேதி வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது. நாணயத்திற்கான நடைமுறைகள் முடிந்த நிலையில், நாணய வெளியீட்டு விழாவை இன்று நடத்த தமிழக அரசு திட்டமிட்டது.
கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 6.50 மணிக்கு நடைபெற்றது. இந்த விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டை குறிக்கும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
இந்த விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் முன்னிலை வகித்து வரவேற்புரையாற்றினார். இந்த விழாவில் திமுக எம்பிக்கள், எம் எல் ஏக்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல் முருகன், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர்.
அதிமுக தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் யாரும் பங்கேற்கவில்லை. . கருணாநிதியின் நுற்றாண்டு நினைவு வெளியீட்டு விழாவில் அதிமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவரான ஜெயக்குமார் முன்பே கூறியிருந்தார். அதன்படி விழாவில் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications