ஸ்டாலின் என்றாலே உழைப்பு.. திமுக முப்பெரும் விழாவில் தோன்றிய AI கருணாநிதி! தொண்டர்கள் நெகிழ்ச்சி
சென்னை: சென்னையில் நடந்த திமுக முப்பெரும் விழாவில், திமுகவை ஆட்சியில் கம்பீரமாக ஸ்டாலின் அமர வைத்துள்ளதாகவும்.. ஸ்டாலின் என்றாலே உழைப்பு உழைப்பு உழைப்புதான்.. கழக பணியில் 55 ஆண்டுகளாக அயராது உழைப்பவர் ஸ்டாலின் என கருணாநிதி உரையாற்றுவது போல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முப்பெரும் விழாவில் கருணாநிதியின் குரல் ஏஐ தொழில் நுட்பத்தில் ஒலித்ததை கேட்டதும் தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் ஆளும் திமுக தொடங்கி 75 ஆண்டுகள் ஆவதையொட்டி பவளவிழா, அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்தநாள் ஆகிய முப்பெரும் விழா இன்று நடைபெற்று வருகிறது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை இந்த முப்பெரும் விழா தொடங்கியது.

முப்பெரும் விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் கலந்து கொண்டார். திமுகவின் 75 ஆண்டு கால சாதனைகள், கட்சி சந்தித்த சோதனைகள் ஆகியவை அடங்கிய விவரங்கள் 500-க்கும் மேற்பட்ட பதாகைகளாக விழா நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
விழா தொடங்கியதும், மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி மேடையில் அமர்ந்து இருப்பது போல ஏஐ தொழில் நுட்பம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இரு பெரிய இருக்கைகளில் கருணாநிதி, ஸ்டாலின் அமர்ந்துள்ளது போல ஏஐ மூலம் காட்சியமைப்பு செய்யப்பட்டு இருந்தது. இது மட்டும் இன்றி திமுக பவள விழாவை முன்னிட்டு ஏஐ தொழில் நுட்பம் மூலம் கருணாநிதி வாழ்த்து தெரிவித்து உரையாற்றுவது போல ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது.
திமுகவை ஆட்சியில் கம்பீரமாக ஸ்டாலின் அமர வைத்துள்ளதாகவும் ஸ்டாலின் என்றாலே உழைப்பு உழைப்பு உழைப்புதான்.. கழக பணியில் 55 ஆண்டுகளாக அயராது உழைப்பவர் என ஏஐ தொழில் நுட்பம் மூலம் கருணாநிதி உரையாற்றுவது போல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முப்பெரும் விழாவில் கருணாநிதியின் குரல் ஏஐ தொழில்நுட்பத்தில் ஒலித்ததை கேட்டதும் தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
முப்பெரும் விழாவில் 18 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 5,000 வாழை மரங்கள் தோரணங்களாக கட்டப்பட்டுள்ளன. 11 இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. முப்பெரும் விழாவை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயமும் வண்ண விளக்குகளால் ஜொலித்து வருகிறது.
திமுக முப்பெரும் விழாவில் திமுகவின் விருதுகள், தொண்டர்களுக்கான பணமுடிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பெரியார் விருது- பாப்பம்மாள்; அண்ணா விருது- அறந்தாங்கி மிசா ராமநாதன்; கருணாநிதி விருது ஜெகத்ரட்சகன்; பாவேந்தர் விருது- கவிஞர் தமிழ்த் தாசன்; பேராசிரியர் விருது- விபி ராஜன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு!












Click it and Unblock the Notifications