கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள்.. மாணவ மாணவிகளே ஸ்வீட் நியூஸ்.. பள்ளிகளில் இன்று இனிப்பு பொங்கல்
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இன்று பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொழுது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர், சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்களுக்கு முன்னாள் முதலமைச்சர்களின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சத்துணவு/குழந்தைகள் மையங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கன்வாடி மையங்களில் 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் சத்துணவு திட்டத்தின் மூலம் பயன்பெறும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 3ஆம் தேதி இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணையும் வெளியிட்டது.
ஆனால் இந்த கல்வி ஆண்டில் திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவில்லை. கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இரு வாரங்கள் கழித்து தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால், கலைஞர் கருணாநிதியின் பிறந்தாளன்று பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்பட முடியாமல் போனது.
அதன் தொடர்ச்சியாக, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இன்று சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படவுள்ளது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications