தமிழிசைக்கு குற்றப் பரம்பரையின் வரலாறு தெரியுமா.. மன்னிப்பு கேளுங்கள்.. கருணாஸ் ஆவேசம்!
Recommended Video

சென்னை: குற்றப் பரம்பரையின் வரலாறு தெரியாமல் ஒரு சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கருத்தை வெளியிட்டுள்ள தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும் என கருணாஸ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜனின் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.
இந்த செய்தியை டிவிட்டரில் டேக் செய்த தமிழிசை சவுந்திரராஜன், குற்ற வழக்கு இல்லை, நான் கற்ற பரம்பரை. குற்ற பரம்பரை அல்ல. கணவரும் அவ்வாறே. வீண் வதந்தி? தோல்வி பயம்? எதற்கு என்ற ரீதியில் தமிழிசை தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஜாலியான் வாலாபாக்
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 68 சமூக மக்களைப் பிரித்து குற்றப் பரம்பரை சட்டம் கொண்டு வந்து அதன் கீழ் இவர்களைக் கொண்டு வந்தனர் வெள்ளையர். இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வராமல் இருந்த மாயக்காள் உள்ளிட்ட பிறமலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 16 பேரை போலீஸார் குருவி சுடுவது போல சுட்டுக் கொன்றனர். பெருங்காமநல்லூர் கிராமத்தில் நடந்த அந்த கொடூர சம்பவம் தென்னகத்து ஜாலியான் வாலாபாக் என்று வர்ணிக்கப்படுகிறது.

திமுக மீது தமிழிசை புகார்
இந்த நிலையில் தமிழிசை குற்றப் பரம்பரை என்று கூறி போட்ட டிவீட் பெரும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. இதையடுத்து தனது பதிவுக்கு தமிழிசை அதே டுவிட்டரில் விளக்கத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் குடும்பம்
அதில் நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்ற அமர்வின் இடையே தி.மு.க வினர் எனது கணவரையும், குடும்பத்தினர் மீது வீண் அவதூறு பரப்பும் வகையில் அவர் தன் குற்ற வழக்குகளையும், வருமானத்தையும் மறைத்ததாக பொய்யான புகாரை அளித்த போது எனது கணவர் புகழை கெடுக்கும் விதத்தில் வந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் குற்றபரம்பரை என நான் குறிப்பிட்டது தமிழகத்தை ஆண்ட தி.மு.க ஊழல் குடும்பம், ஊழல் பரம்பரை, ஊழல் விஞ்ஞானிகள் பற்றித்தான். ஆனால் தேசியத்தையும் தெய்வீகத்தையும் இருகண்கள் என கொண்ட நான் என்றும் போற்றும் பரம்பரை பற்றியென வழக்கம்போல் திரித்துக்கூறும் தி.மு.கவினரை கண்டிக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

அவமானம்
இந்த நிலையில் தமிழிசை சவுந்திரராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் என திருவாடானை தொகுதி எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிகள் படைத் தலைவருமான கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில் குற்ற பரம்பரை என்பதன் வரலாறு தெரியாமல் குறிப்பிட்டு அவமானப்படுத்திவிட்டார்.

கருணாஸ் கோரிக்கை
தமிழகத்தின் வரலாறு தெரியாமல் தமிழிசை இருப்பது கண்டனத்துக்குரியது. தமிழிசை கற்ற பரம்பரை அல்ல, தமிழகத்தின் உரிமையை விற்ற பரம்பரை. எனவே தமிழிசை தான் செய்த பதிவிற்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் கருணாஸ்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications