10.5 % உள் ஒதுக்கீடு ரத்து.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு.. முக்குலத்தோர் புலிப்படைக்கு வெற்றி- கருணாஸ்
சென்னை: வன்னியர்களுக்கு வழங்கிய 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செய்தது செல்லும் என உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு உண்மையான சமூகநீதிக்கும் முக்குலத்தோர் புலிப்படைக்கும் கிடைத்த வெற்றி அந்த அமைப்பின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சே. கருணாஸ் கூறியுள்ளதாவது: கடந்த முறை ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அவசர அவசரமாக வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது.
இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டது. வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை எதிர்த்து முக்குலத்தோர் புலிப்படையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

உயர்நீதிமன்றம்
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் எனக் கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டிற்கான அரசாணையை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் பாமக உள்ளிட்டோர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதிகள்
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 23ம் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், இன்று 31. 03. 2022 காலை நீதிபதிகள் எல். நாகேஸ்வராவ் மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முக்குலத்தோர் புலிப்படை எழுத்துபூர்வமாக எடுத்துரைத்த எழுத்துரை வாதத்தின் படி மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

சமூகநீதி
இதுதான் உண்மையான சமூக நீதிக்கு கிடைத்த நீதி! மேலும் இத்தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியதாவது, வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு செல்லும். உள் இட ஒதுக்கீடு வழங்கும் போது அதற்கான சரியான நியாயமான காரணங்களை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

உள்ஒதுக்கீடு
உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரமிருந்தாலும் சரியான காரணங்களை கூற வேண்டும். ஆனால் வன்னியர்களை தனிப் பிரிவாக கருதுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. சாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு செய்ய முடியாது. இது அரசியல் சட்டம் 14, 15,16 பிரிவின் கீழ் சட்டவிரோதமானது. எனவே கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணை தள்ளுபடி செய்யப்படுகிறது.

உயர்நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றத்தின் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது." என்று தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது. முக்குலத்தோர் புலிப்படை தனித்துவமாக கூறிய வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுகொண்டது முக்குலத்தோர் புலிப்படையினருக்கு கிடைத்த வெற்றி! இவ்வாறு சே. கருணாஸ் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications