பார்த்தீங்களா.. ஜோதிமணி சொன்ன நன்றி.. "அவர்" பெயரையே காணோமே.. என்னவா இருக்கும்?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்றி தெரிவிக்க மறந்தாரா எம்பி ஜோதிமணி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 நாள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வந்த நிலையில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அதை வாபஸ் பெற்றார்.. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ஏன் இந்த திடீர் போராட்டம்? | Karur MP Jothimani Protest | Oneindia Tamil

    மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மூலம் மாற்று திறனாளிகள் நலத்திட்ட செயல்பாடுகள் (ADIP) என்ற திட்டம் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.. இந்த திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிக்கு பல்வேறு உதவிகள், 3 சக்கர வாகனங்கள், ஸ்பெஷல் நிதி உதவிகள் அளிக்கப்பட்டும் வருகின்றன.

    அந்த வகையில், தமிழ்நாட்டிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் கரூரில் மட்டும் இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.. இதற்கான முன்னெடுப்பை ஜோதிமணி கையில் எடுத்தார்.. உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் யார் என்ற லிஸ்ட்டையும் எடுத்து கலெக்டரிடம் தந்தும் பரிசீலிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

     போராட்டம்

    போராட்டம்

    அதனால்தான் கலெக்டர் ஆபீசுக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தில் நேற்று ஜோதிமணி ஈடுபட்டார்.. தலைமைச் செயலர் இறையன்புக்கும் கடிதம் எழுதினார்... மற்றொரு பக்கம் கலெக்டர் பிரபு சங்கர் அவரை சமாதானப்படுத்த முயன்றும், அதையும் ஜோதிமணி ஏற்காமல் இரவெல்லாம் அங்கேயே தூங்கி போராட்டம் செய்தார். இறுதியில் இன்று போராட்டத்தில் பெற்றி பெற்றுள்ளார்.. மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்வதாக ஜோதிமணியிடம் உறுதியளிக்கப்பட்டதையடுத்து, தொடர் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

     திட்டம்

    திட்டம்

    இந்த போராட்டத்தை பொறுத்தவரை ஜோதிமணிக்கு வெற்றிதான்.. 2 நாளில் ஒரு திட்டத்தை செயல்பட தன்னுடைய உறுதிமிக்க ட்போராட்டத்தினால் செயல்பட வைத்துவிட்டார்.. அதேசமயம், இது அரசியல்ரீதியான தாக்கங்களையும், சில அதிர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது.. இந்த அதிர்வுகள் காங்கிரசுக்குள் பலமாகவும், திமுகவுக்குள் லேசாகவும் அசைத்து பார்த்தும்விட்டது. இப்போதைக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது.. நல்லஇணக்கத்துடனேயே உள்ளது..

     விமர்சனங்கள்

    விமர்சனங்கள்

    ஆனால், ஒரு கலெக்டர் நடவடிக்கை எடுக்காததற்காக 2 நாள் போராட்டம் தேவையா என்ற விமர்சனங்கள் கரூர் மாவட்ட காங்கிரசுக்குள் எழுந்துள்ளது.. ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் சமயத்தில் ஜோதிமணி தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்ததை காங்கிரஸ் தரப்பு விரும்பவில்லை... சமீபத்தில்கூட, அண்ணாமலையை பாஜக மாநில தலைவராக நியமனம் செய்தபோதே, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதே கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோதிமணியின் பெயரும் அடிபட்டது.. ஆனால், கோஷ்டி பூசல் அதனை முறியடித்துவிட்டது. இன்றைய போராட்டத்தினால் அதிருப்தி மேலும் சேர்ந்துவிட்டது.

     போராட்டம்

    போராட்டம்

    அதேபோல, இன்றைய ஜோதிமணியின் போராட்டத்தை திமுகவும் ரசிக்கவில்லை என்றே தெரிகிறது.. அதுமட்டுமல்ல, அரசின் நடவடிக்கையை மறைமுகமாக ஜோதிமணி விமர்சித்ததையும் திமுக கவனிக்காமல் இல்லை.. அதைவிட முக்கியம் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜோதிமணி அறிவித்து ஒரு ட்வீட் போட்டிருக்கிறார்..

     உத்தரவாதம்

    உத்தரவாதம்

    அந்த ட்வீட்டில், "கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ADIP முகாம் நடத்தப்படும் என்று உத்திரவாதம் கொடுக்கப்பட்டத்தை அடுத்து எமது உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. மக்கள் நலனில் அக்கறையுள்ள முதல்வர் முக ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார்.

     சகோதர பாசம்

    சகோதர பாசம்

    ஆனால், அதேமாவட்டத்தை சேர்ந்த திமுகவின் முக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை ஜோதிமணி குறிப்பிடவில்லை.. செந்தில்பாலாஜி - ஜோதிமணியின் சகோதர பாசத்தை இந்த நாடு அறியும்.. கடந்த எம்பி தேர்தலின்போது, ஜோதிமணிக்கு, ஆரம்பம் முதலே தேர்தல் கமிஷன், மாவட்ட நிர்வாகம், போலீஸ் தரப்பில் என குடைச்சல் இருந்தபோது, செந்தில்பாலாஜிதான் ஜோதிமணி பக்கத்தில் வந்து நின்றவர்..

     ஜோதிமணி

    ஜோதிமணி

    ஜோதிமணியும் போகும் இடமெல்லாம் அண்ணன் செந்தில் பாலாஜி என்று பாசம் காட்டினார். செந்தில் பாலாஜியும் தனது சகோதரிக்காக ஓட்டு போட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். வேட்பு மனு தாக்கலின்போதும் கூட பாசக்கார தங்கச்சியாக, செந்தில் பாலாஜி அருகே அப்படி ஒரு ஆர்வத்தோடு அவர் அமர்ந்திருந்ததை இன்னும் தொகுதி மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்..

     அரவக்குறிச்சி

    அரவக்குறிச்சி

    அவ்வளவு எதற்கு? பெண்கள் அரசியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த வருடம் ஜோதிமணி அமெரிக்கா கிளம்பியபோது, அவருடனேயே வந்து சென்னை ஏர்போர்ட் வரை வந்து பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தவர் செந்தில் பாலாஜி.. அந்த பாசம் இன்று எங்கே என்பதுதான் பலரது சந்தேகமாக உள்ளது.. ட்வீட்டில் அவர் பெயரை ஜோதிமணி குறிப்பிட்டிருக்கலாம்.. அரசியல் கட்சியின் சீனியர் என்ற முறையில் அல்லது திமுக அமைச்சர் என்ற முறையில் அல்லது பாசத்துக்குரிய அண்ணன் என்ற முறையில் ஒரு நன்றி தெரிவித்திருக்கலாமே என்ற ஆதங்க குரல்தான் அரவக்குறிச்சியில் இருந்து எழுந்துள்ளது..!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+