பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது.. கரூர் பலி பற்றி வதந்தி பரப்பியதால் போலீஸ் அதிரடி நடவடிக்கை
சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து இருந்தனர். எனினும் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் வதந்தி பரப்பிய 3 பேரை நேற்று போலீசார் கைது செய்திருந்தனர்.. இதில் ஒருவர் பாஜகவை சேர்ந்தவர், மற்ற 2 பேரும் தவெகவை சேர்ந்தவர்கள்.. இந்நிலையில், கரூர் சம்பவத்தில் அவதூறு பரப்பியதாக பிரபல யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியாகினர். படுகாயம் அடைந்த மேலும் பலர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்..

தகவலறிந்து உடனடியாக கரூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு உயிரிழந்தோர் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, காயம் அடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு கிளம்பினார். துணை முதல்வர் உதயநிதி துபாயில் இருந்து பாதியிலேயே வந்து கரூர் சூழல்களை கவனித்தார். அதேபோல அமைச்சர்கள் கரூரில் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்கள்.. தலைவர்கள் பலர் தொடர்ந்து தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
ஒரு நபர் ஆணையம்
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைக்க, அந்த ஆணையமும் தமது விசாரணையை தொடங்கி உள்ளது. மற்றொருபுறம் காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
ஆனால், கரூர் நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் திமுகவின் சதி உள்ளதாகவும்,செந்தில் பாலாஜிதான் அதற்கு காரணம் என்றும் சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரப்பப்பட்டன. இதையடுத்து, கரூர் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம், அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
ஏற்கனவே போலீஸ் வார்னிங்
அதுபோலவே, இந்த சம்பவம் பற்றி பொதுவெளியியில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை பாயும் என்று காவல்துறையும் எச்சரிக்கை விடுத்தது.
"கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது.
இவ்வாறு, பொதுவெளியில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது பெறப்பட்ட புகார்களின் பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கேட்டுக் கொண்டிருந்தது..
நேற்று 3 பேர் கைது
அந்தவகையில், ஏற்கனவே சோஷியல் மீடியாவில் அவதூறு பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பாஜகவை சேர்ந்த சகாயம், தவெக நிர்வாகிகள் சிவநேசன், சரத்குமார் ஆகிய 3 பேரை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர்..
சகாயம் (38) பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர், பாஜக மாநில செயலாளர் (கலை மற்றும் கலாசாரம்).. அதேபோல மாங்காடு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன், தவெக உறுப்பினர் ஆவார்.. ஆவடியை சேர்ந்தவர் சரத்குமார்(32) தவெக 46வது வார்டு செயலாளராக உள்ளார்.
பெலிக்ஸ் ஜெரால்டு
இந்த நிலையில், பிரபல யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கரூர் சம்பவம் குறித்து தன்னுடைய ரெட் பிலிக்ஸ் யூடியூப் சேனலில், அவதூறு பரப்பும் வகையியில் பேசியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று காலையில் 7.30 மணிக்கு, ஜெரால்டின் வீட்டிற்கே சென்று, அவரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.. கைதான பெலிக்ஸ் ஜெரால்டை, சென்னை காவல் ஆணையரகத்தில் வைத்து விசாரணையையும் தற்போது நடத்தி வருகிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications